• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வாங்யீ, ஆசியான்-சீனா-ஜப்பான்-தென் கொரிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு
  2016-07-26 16:01:04  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 26ஆம் நாள் லாவோஸின் விண்யென்டியான் நகரில், ஆசியான்- சீனா-ஜப்பான்-தென் கொரிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஆசியானுக்கும் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவற்றுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, கிழக்காசிய பிரதேசத்தில் மிகவும் பக்குவமடைந்துள்ள ஒத்துழைப்பு முறைகளில் ஒன்றாகும். இதற்கு, ஆசியாவின் ஏன் உலகின் அரசியல் பொருளாதார துறையில் முக்கிய தகுநிலை உள்ளது என்று வாங்யீ தெரிவித்தார்.

புதிய ஒத்துழைப்பு துறைகளை ஆக்கப்பூர்வமாக விரிவாக்கி, பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பு பன்முகங்களிலும் வளர்வதை முன்னேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

அடுத்து, தொடர்புடைய நாடுகள், நாணய பாதுகாப்பு ஒத்துழைப்பில் அதிக கவனம் செலுத்தி, வர்த்தக முதலீட்டு ஒத்துழைப்பை ஆழமாக்கி, வேளாண் துறையிலான வறுமைக் குறைப்பு ஒத்துழைப்பை முன்னேற்றி, தொடர்பு மற்றும் பரிமாற்றத்தை தூண்டி, சர்வதேச உற்பத்தி ஆற்றல் ஒத்துழைப்பை மேற்கொண்டு, சமூக பரிமாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040