• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தேசிய தகவல் மயமாக்க வளர்ச்சிக்கான நெடுநோக்குத் திட்டம்
  2016-07-28 16:09:11  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய தகவல் மயமாக்க வளர்ச்சிக்கான நெடுநோக்குத் திட்டம் 27ஆம நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் தகவல் மயமாக்கத் துறையின் வளர்ச்சி திசை இதில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்திட்டப்படி, 2020ஆம் ஆண்டுக்குள் 3ஆவது அல்லது 4ஆவது தலைமுறை தொழில் நுட்பம் கொண்ட இணைய வசதி சீனா முழுவதிலும் பரவல் செய்யப்படும். 5ஆவது தலைமுறை தொழில் நுட்பம் பற்றிய ஆய்வு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைய வேண்டும். தகவல் துறையில் மொத்த நுகர்வு தொகை 6 இலட்சம் கோடி யுவானை எட்ட வேண்டும். மின்னணு வணிக வர்த்தகத் தொகை 38 இலட்சம் கோடி யுவானாக அதிகரிக்க வேண்டும். தகவல் துறையில் மையத் தொழில் நுட்பத்தின் ஆய்வு நிலை உலகில் முன்னேறிய நிலையில் இருக்க வேண்டும். சீன-ஆசியான் தகவல் பகிர்வு இணையத்தை உருவாக்கி, இணைய பட்டுப் பாதையை கட்டியமைக்க வேண்டும்.
2025ஆம் ஆண்டளவில், சீனாவில் மக்கள் தடையின்றி அகன்ற அலவரிசை இணையத்தைப் பயன்படுத்தலாம். தகவல் துறையிலான மொத்த நுகர்வுத் தொகை 12 இலட்சம் கோடி யுவானாக மாற வேண்டும்.  மின்னணு வணிக வர்த்தகத் தொகை 67 இலட்சம் கோடி யுவானாக மாற வேண்டும்.
இது மட்டுமல்லாமல், 4 பன்னாட்டு தகவர் பரிமாற்ற மேடைகளை சீனா கட்டியமைக்கும். அவற்றின் மூலம், பசிபிக், மத்திய கிழக்கு ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, தென் கிழக்காசியா, இந்தியா, பாகிஸ்தான், மியன்மார், ரஷியா முதலிய பிரதேசங்கள் மற்றும் நாடுகள் இணைக்கப்படும். அதன் விளைவாக, மேற்கூறிய பிரதேசங்களில் அதிக வலுவான சர்வதேச்ச் சந்தையில் போட்டியாற்றல் மிகுந்த நாடு கடந்த இணைய மற்றும் தகவல் தொழில் நிறுவனங்கள் தோன்றும்.
21ஆவது நூற்றாண்டின் நடுப்பகுதியில், இணையத் துறையில் சீனா ஒரு ஆற்றல் மிக்க நாடாக மாறும். உலகத் தகவல் மயமாக்க வளர்ச்சித் துறையில் சீனா மேலும் அதிக பங்காற்றுவது உறுதி.
இந்த்த் திட்டத்தை வெளியிடும் நோக்கம் பற்றி சீனத் தேசிய இணைய தகவல் அலுவலகத்தின் துணைத் தலைவர் சுவாங் லுங்வென் எடுத்து கூறினார். முதலாவதாக, தகவல் துறைப் பரட்சியில் வரலாற்றுத் தன்மை வாய்ந்த வாய்ப்பை இறுகப் பற்ற வேண்டும். புதிய சுற்று சர்வதேசப் போட்டியில் சீனா முன்னணியில் இருக்க பாடுபட வேண்டும். இரண்டாவதாக, தகவல் மயமாக்கப் பணியின் பயனுடன், பொருளாதாரக் கட்டமைப்பில் சீர்திருத்தத்தை விரைவுப்படுத்தி, புதிய வளர்ச்சித் துறையை வளர்க்க வேண்டும். மூன்றாவதாக, தகவல் மயமாக்கம் மூலம் சமூகத்துக்கும் மக்களுக்கு நன்மை வழங்க வேண்டும என்று சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் இணையத் துறை விரைவாக வளர்ந்து வருகின்றது. சீன இணைய மற்றும் தகவல் மையம் வழங்கிய புதிய புள்ளிவிபரங்களின்படி, 2015ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் வரை, சீனாவில் இணையப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 68 கோடியே 80 இலட்சமாகும். நாடளவில் இணையப் பரவல் விகிதம் 50.3 விழுக்காடாகும். இது உலகத்தில் சராசரி நிலைமையுடன் ஒப்பிட்டால், 3.9 விழுக்காடு அதிகம். ஆசியாவில் இருப்பதை விட 10.1 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040