அடுத்த திங்களில், ஜி 20 உச்சிமாநாடு, சீனாவின் ஹாங்சோ மாநகரில் நடைபெறவுள்ளது. தற்போது, இந்த உச்சிமாநாடு நடைபெறுவதற்குரிய வகையில் இம்மாநகரம் ஆக்கப்பூர்வமாக தயார் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஆயத்தப் பணிகள் இறுதியான காலக்கட்டத்தில் நுழைந்துள்ளன. ஹாங்சோ நகரில் வாழ்கின்ற நகரவாசி ஹௌ ஷியூ ச்சின் அம்மையார் அவர்களுக்கு, இக்கோடைகாலத்தின் போது வேலை அதிகம். ஜி 20 உச்சிமாநாட்டின் வசிப்பிட தொண்டர்களுள் ஒருவராக அவர் விளங்குகின்றார். உள்ளூர் பிரதேசத்தின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், நாள்தோறும், சுமார் 3 மணி அளவில் அவர்கள் தங்கள் வசிப்பிடத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும். அண்மையில், இம்மாநகரில் தட்ப வெட்ப நிலை மிகவும் அதிகரித்து எங்கெங்கு, கடும் காணப்பட்டது. ஆனால், இக்கடுமையான வானிலையைச் சகித்துக் கொள்வதாக குறிப்பிடும். அவர் மேலும் கூறியதாவது
ஜி 20, காங்சௌ மாநகரில் நடைபெறுவது, எங்களுக்குப் பெருமை அளிக்கும் ஒன்றாகும். 20 நாடுகள் சர்வதேச அளவில் பங்கேற்கும் மிக முக்கியமான உச்சிமாநாடு இதுவாகும். இம்மாநகரில் ஒரு நகரவாசியாக விளங்குவது பெருமை தரக் கூடியது. குடியிருப்புப் பகுதியில் ஒரு தொண்டராக சேவை செய்வதன் மூலம் ஜி 20 மாநாட்டுக்கு சேவை புரிந்து வருகின்றேன். குடியிருப்புப் பிரதேசத்தின் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தைப் பேணிக்காக்கும் வகையில் எனது பணி அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், 70 வயதான அவர் ஓய்வு நேரத்தின் போது ஆங்கில மொழி ஆசிரியரிடமிருந்து ஆங்கில பாடங்களைக் கற்றுக்கொள்கின்றார். இதற்கு முன், அவருக்கு ஆங்கில மொழி தெரியாது. ஆனால், இந்த முறை, ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலம், வெளிநாட்டவர்களுக்கு உதவி செய்யலாம்.தற்போது, ஹாங்சோ நகரம், ஜி 20 உச்சிமாநாட்டுக்கான நேரமாக மாறியுள்ளது. இந்த உச்சிமாநாட்டில், மொழிப்பெயர்ப்புப் பணியாளர்கள், சேவை பணியாளர்கள், தொடர்புடைய பணியாளர்கள் முதலிய சுமார் 1000 மக்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 26 ஆயிரம் மக்கள் இந்த உச்சிமாநாட்டின் தொண்டர்களாக பங்காற்ற விண்ணப்பம் செய்துள்ளனர். தற்போது சுமார் 4000 மக்கள் தொண்டர்களாக மாறியுள்ளனர்.செப்டெம்பர் திங்கள் 4ஆம் நாளில், 11வது ஜி 20 உச்சிமாநாடு இந்நகரில் துவங்கும். இந்த உச்சிமாநாட்டின் ஆயத்தப் பணி ஏற்கனவே நிறைவடைந்துள்ளது என்று இந்நகராட்சிக் கட்சிக் குழுச் செயலாளர் சௌ யி தே தெரிவித்தார். அவர் கூறியதாவது இந்த உச்சிமாநாட்டிற்கான வசதி மற்றும் சுற்றுச் சூழலை இம்மாநகரம் உருவாக்கியுள்ளது. இந்நகரின் தோற்றத்தின் மூலம், சீனாவின் தனிச்சிறப்பு வாய்ந்த பாணியை நன்றாக வெளிப்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.