ஆட்சி கவிழ்ப்புக்கு திட்டமிடுவது, சதி செய்வது, நடைமுறைப்படுத்துவது ஆகியவை மிகவும் கடுமையான குற்றங்களாகும். பல்வேறு நாடுகளின் குற்றவியல் சட்டத்தில் இது போன்ற குற்றச் செயல்களைத் தண்டிக்கும் விதிகள் இடம்பெறுகின்றன. சீனாவில், ஆட்சி கவிழ்ப்பு குற்றம், குற்றவியல் சட்டத்தின் முதலாவது பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் குற்றங்களைச் சேர்ந்தது. ஆகஸ்ட் 2 முதல் 5ஆம் நாள் வரை, ச்சே யன் மின் (Zhai Yan Min), ஹு ச்சி கன் (Hu Shi Gen), சோ சி ஃபெங் (Zhou Shi Feng), கொ ஹுங் கோ (Gou Hong Guo) ஆகியோர் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கை சீனாவின் தியன் ஜீன் மாநகரின் இரண்டாவது இடைநிலை மக்கள் நீதி மன்றம் வெளிப்படையாக விசாரணை செய்தது. ஆட்சி கவிழ்ப்பு தொடர்பான குற்றத்தில் இந்த நான்கு பேருக்கும் பங்கிருப்பதாக இந்நீதி மன்றத்தின் முதலாவது முறை தீர்ப்பில் வெளிப்படையாக அளிக்கப்பட்டது. இத்தீர்ப்பை ஏற்றுக்கொள்வதோடு, மேல்முறையீடும் செய்ய போவதில்லை என்று இந்நீதி மன்றத்தில் இந்த நான்கு பேரும் தெரிவித்தனர். நீதி மன்றத்தால் வெளியிடப்பட்ட இந்த நான்கு பேரின் குற்ற விபரங்கள், வெளியுலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விபரங்கள் பற்றி சீனாவின் சமூக இணையத் தளங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன. சில வழக்கறிஞர்கள், தொழில் முறை ஒழுக்க நெறியையும், ஏன் சட்டத்தை மீறிய செயல்களிலும் ஈடுபடுவதாக சட்டத் துறைப் பிரமுகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்
சீன மக்கள் பேரவை பிரதிநிதிகள், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்கள், சட்டவியல் துறை அறிஞர்கள், தொழில் முறை வழக்கறிஞர்கள், பல்வேறு சமூகத் துறையினர், பத்துக்கு அதிகமான சீன மற்றும் வெளிநாட்டு செய்தி ஊடகங்களின் செய்தியாளர்கள் ஆகியோர் இந்நீதி மன்றத்தின் வழக்கு விசாரணையைக் கேட்டனர். அதே வேளையில், தியன் ஜின் இரண்டாவது இடைநிலை நீதி மன்றம், தனது அதிகாரப்பூர்வ நுண் வலைப்பதிவில் இவ்விசாரணை பற்றிய ஒளிப்பதிவை வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளில், சீனாவில் சமூக இணைய மேடையான சீனா நுண் வலைப்பதிவில் இந்த விசாரணை பற்றி பரந்துபட்ட அளவில் விவாதிக்கப்பட்டது. நிற புரட்சியை எச்சரிப்பது பற்றிய விவாதப் பதிவுகளின் எண்ணிக்கை, ஒரு கோடியை 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
வழக்கறிஞர்கள் சட்டத்தின்படி வழக்குகளைக் கையாண்டால்தான், சீனாவின் நீதி சட்டச் சூழல் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று பீக்கிங் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் துறை பேராசிரியர் சேங் ருய் குவா சுட்டிக்காட்டினார்.
மேலும், வழக்கறிஞர்கள் சட்டங்கள் மற்றும் சட்டவிதிகளைச் சார்ந்து தொழில் முறை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று சீனத் தேசிய வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.