சீன சுங்கசாவடி தலைமையகம் 8ஆம் நாள் சீனாவின் முதல் 7 திங்கள் கால ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக தொகையை வெளியிட்டுள்ளது. ஜூலை திங்கள், சீனாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. இறக்குமதி 5.7 விழுக்காடு குறைந்துள்ளது. மொத்த தொகை, கடந்த ஆண்டின் ஜூலை திங்களில் இருந்ததை விட 0.9 விழுக்காடு குறைவு.
சீனாவின் ஏற்றுமதி மார்ச் திங்கள் முதல் தொடர்ந்து 5 திங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் சீனா தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சீன வணிக அமைச்சகத்தின் ஆராய்ச்சி கழக அலுவலர் பெய்மிங் கூறினார்.
ஜூலை திங்களில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஆனால் சீனா வெளிநாட்டு வர்த்தகத்தின் கடினமான கட்டத்தில் உள்ளது. கடந்த ஆண்டின் ஜூலை திங்களில் சீன வர்த்தகம் குறைவாக இருந்துள்ளது. எனவே இவ்வாண்டின் தொகை ஒப்பீட்டளவில் அதிகம் என்றார் அவர்.
இவ்வாண்டின் முதல் 7 திங்களில், சீன ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் சில சிறப்புகள் காணப்பட்டுள்ளன. முதலாவதாக, பதனீட்டு தொழிலின் வர்த்தகம், மொத்த வெளிநாட்டு வர்த்தகத்திலுள்ள பங்கு குறைந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானுடனான வர்த்தகம் அதிகரித்துள்ளது. மாறாக, அமெரிக்கா மற்றும் ஆசியான் நாடுகளுடனான வர்த்தகம் குறைந்துள்ளது. இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் ஆராய்ச்சி கழக அலுவலர் பெய்மிங் கூறியதாவது
ஏற்றுமதி அதிகரிக்கும் அறிகுறி உள்ளது. ஆனால் அது ஒரு நிதானமான வளர்ச்சி போக்கு இல்லை. சர்வதேச சந்தையைப் பார்த்தால், அமெரிக்காவின் பொருளாதாரம் நிதானமற்றது. ப்ரெக்சிட், ஐரோப்பிய பொருளாதாரத்துக்கு நிதானமற்ற காரணியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, வெளிநாட்டு வர்த்தகம் மீது மிக அதிக எதிர்பார்ப்புக் கொள்ள கூடாது என்றார் அவர்.
சீனா, வெளிநாட்டு வர்த்தக சிக்கல்களைச் சமாளிக்க, உள்நாட்டு உந்து ஆற்றலை அதிகரிக்க வேண்டும். சீனாவின் தொழில்களின் கட்டுக்கோப்பு மேம்பாடு மிக முக்கியம் என்று பெய்மிங் கூறினார்.
வெளிநாட்டு வரத்தகத்தின் முக்கிய பகுதி, உழைப்பை மையமாக கொண்ட பாரம்பரிய தொழிலிருந்து, தொழில்நுட்ப மற்றும் தரத்தை கொண்ட புத்தாக்க தொழிலுக்கு மாற வேண்டும். சர்வதேச சந்தையில் போட்டியாற்றலை வலுப்படுத்த, இது மிக முக்கியமானது என்றார் அவர்