• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தை வலுப்படுத்தும் சீனா
  2016-08-10 15:01:31  cri எழுத்தின் அளவு:  A A A   
12ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத்தைச் சீனா வலுப்படுத்தி வந்துள்ளது. இதில் குறிப்பிட்ட சாதனைகள் பெறப்பட்டுள்ளன. 13ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் தேசிய அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கத் திட்டத்தைச் சீன அரசு அண்மையில் வெளியிட்டது. இத்திட்டத்தின்படி, 2020ஆம் ஆண்டு வரை, சீனாவின் பன்னோக்க புத்தாக்க ஆற்றல் தொடர்பான உலக வரிசை, தற்போதைய 18ஆவது இடத்திலிருந்து 15ஆவது இடத்துக்கு உயர்த்தப்படும்.

செயற்கை புத்திசாலித்தனம், உயிரி மருத்துவம் மற்றும் மருந்து, புதிய வேதிபொருட்கள் உள்ளிட்ட அறிவியல் தொழில் நுட்ப துறைகளில், ச்சுங் குவன் சுன் முன்மாதிரி மண்டலத்திலுள்ள தொழில் நிறுவனங்கள், உலக அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கப் போட்டி கட்டமைப்பில் முக்கிய பங்காற்றியுள்ளன. 2015ஆம் ஆண்டு இறுதி வரை, ச்சுங் குவன் சுன் முன்மாதிரி மண்டலம், 5576 வரையறைகளை வெளியிட்டுள்ளது. இவற்றில் 207 சர்வதேச வரையறைகளும், 3111 உள்நாட்டின் வரையறைகள் இடம்பெறுகின்றன.

ச்சுங் குவன் சுன் முன்மாதிரி மண்டலம், முக்கிய புத்தாக்கச் சாதனைகளைப் படைத்து வருகின்றது என்றும், பெய்ஜிங் ஏன் சீனாவின் தொழில் நிலை மேம்பாட்டுக்கும், புத்தாக்க வளர்ச்சிக்கும் இது முக்கிய வழிகாட்டல் மற்றும் தூண்டுதல் பங்காற்றும் என்றும் இம்மண்டலத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் குவோ ஹுங் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு, சீன சமூகம் முழுவதிலும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டுத் தொகை சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. அந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 2.1 விழுக்காடு வகிக்கின்றது. சீன மக்களுக்கு அறிவுசார் காப்புரிமை சான்றுகள் வழங்கப்படும் அளவு, உலகில் இரண்டாவது இடம் வகிக்கின்றது.

அறிவியல் தொழில் நுட்பத் துறையில் வல்லுநர்கள் குறைவு. அடிப்படை ஆய்வுக்கான ஒதுக்கீட்டுத் தொகை, முழு சமூகத்தில் ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான மொத்த ஒதுக்கீட்டுத தொகையில் உள்ள விகிதாசாரம், சுமார் 5 விழுக்காடு வகிக்கின்றது. வெளிநாட்டில் இவ்விகிதாசாரம், பொதுவாக 10 விழுக்காட்டுக்கு மேல் நிலைநிறுத்தப்படுகிறது. இத்துறையில் சீனாவுக்கும் வெளிநாடுகளுக்குமிடையே பெரும் இடைவெளி நிலவுகிறது என்று சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் துணை தலைவர் லீ மங் தெரிவித்தார்.

அண்மையில் சீன அரசு வெளியிட்ட 13ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் தேசிய அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க திட்டத்தில், அடுத்த காலக் கட்டத்தில் சீனாவின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி பற்றி முக்கிய இலக்குகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு வரை உலகளவில், புத்தாக்க ரக நாடுகள் வரிசையில் சீனா நுழையும் என்ற கருத்தும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040