• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரென்மின்பி மாற்று விகிதச் சீர்திருத்தம்
  2016-08-11 16:22:53  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க டாலருக்கு நிகரான சீனாவின் ரென்மின்பி மாற்று விகிதத்துக்கான மத்திய விலைபுள்ளியை உருவாக்கும் அமைப்புமுறையை மேம்படுத்த உள்ளதாக கடந்த ஆண்டின் ஆகஸ்ட் 11-ஆம் நாள் சீன மத்திய வங்கி அறிவித்தது.
கடந்த ஒரு ஆண்டில், ரெனமின்பி மாற்று விகிதச் சீர்திருத்தம் குறிப்பிட்ட சாதனையைப் பெற்றுள்ளது. ரென்மின்பி மாற்று விகிதம் சீராக நிலைநிறுத்தப்பட்டு வருகின்றது. மேலும், ரென்மின்பியின் சர்வதேச மயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான அடிப்படையை இது உருவாக்கியுள்ளது.
ரென்மின்பி விகிதச் சீர்திருத்தத்தின் சந்தைமயமான உருவாக்கத்தை முன்னேற்றுவது என்பது, ரென்மின்பி மாற்று விகிதச் சீர்திருத்தத்தை ஏற்படுத்தியதன் முக்கிய நோக்கமாகும் என்று சீன மத்திய வங்கி இச்சீர்திருத்தத்தின் துவக்க காலத்தில் தெரிவித்திருந்தது. இது குறித்து, சீன மத்திய வங்கித் துணைத் தலைவர் யீ காங் கூறுகையில், சந்தைமயமான அமைப்புமுறை, ரென்மின்பியின் நீண்டகால வளர்ச்சிக்குத் துணைபுரியும். ரென்மின்பிக்கான நம்பிக்கைக்கும் ரென்மின்பியின் சர்வதேச மயமாக்கத்துக்கும் இது நல்லச் செயலாகும் என்றார்.
கடந்த ஒரு ஆண்டில், ரென் மின் பி மாற்று விகிதத்தின் மதிப்பு ஏறி இறங்கும் நிலை அதிகரித்துள்ளது. பொதுவாக மாற்று விகிதத்துக்கான எதிர்கால நிலை நிதானமாக உள்ளது. இதுவரை, அமெரிக்க டாலருக்கு நிகரான சீனாவின் ரென்மின்பி மாற்று விகிதத்துக்கான மத்திய விலைபுள்ளி, 100புள்ளியைச் சுற்றி ஏறி இறங்கும் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. 2015 ஆகஸ்ட் 11ஆம் நாள் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது வரையான பத்து ஆண்டுகளுக்குள், அமெரிக்க டாலருக்கு நிகரான ரென்மின்பியின் மாற்று மதிப்பு தெளிவாக அதிகரித்திருந்தது. புதிய மாற்று விகிதச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின், ரென்மின்பி மாற்று விகிதத்துக்கான மத்திய விலைபுள்ளி சுமார் 8 விழுக்காடு குறைந்துள்ளது. இது குறித்து, சீனாவுக்கான ஜி பி மொகன் நிறுவனத்தின் முதன்மை பொருளியலாளர் சு ஹெய் பின் கூறுகையில், மாற்று விகிதச் சீர்த்திருத்தம், குறிப்பிட்ட அளவில், ரென்மின்பியின் மதிப்பு அதிகரிப்புக்கு பங்காற்றியுள்ளது என்றார்.
இவ்வாண்டின் ஜுலை திங்கள் நடைபெற்ற ஜி-20குழுவின் மூன்றாவது நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்கள் கூட்டத்தில், சீன மத்திய வங்கித் தலைவர் சொ சியாவ் சுவான், ரென்மின்பி மாற்று விகிதத்தின் சீர்திருத்த திசை குறித்து தெளிவான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், எதிர்காலத்தில் சீனா தொடர்ந்து கொள்கைகளின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்து, சந்தையுடனான தொடர்பை வலுப்படுத்தும் என்றார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040