எரியாற்றல் கட்டமைப்பு சீர்திருத்தத்தை சீனா முன்னேற்றி வருகிறது. படிம அல்லாத எரியாற்றல், தூய்மையான எரியாற்றல் ஆகியவற்றின் நுகர்வை அதிகரித்து நவீன எரியாற்றல் முறைமையை நிறுவுவது அதன் நோக்கமாகும்.
விலைவாசி சீர்திருத்தம், இந்த போக்கில் மிக முக்கிய பகுதியாகும். மின்சார விலை குறைந்தால், தொழில்நிறுவனங்கள் ஆண்டுதோறும் 100 கோடி யுவானை சிக்கனப்படுத்த முடியும். இது குறித்து, யுன்லிவ் குழுமத்தின் துணை தலைவர் யு சிலின் கூறியதாவது
மின்சார விலைவாசி சீர்திருத்தம் இல்லாமல் இருந்தால், உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்காது என்றார் அவர்.
மின்சார தொழில்நிறுவனங்கள் எரியாற்றல் செலவைக் குறைத்தால், உற்பத்தி செலவை குறைக்கலாம். மேலதிக மின்சாரத்தை உற்பத்தி செய்து விற்க முடியும். இதுவரை, யுன்னான் அன் ஹூய் முதலிய 5 மாநிலங்களில் மின்சார விலைவாசி மொத்தமாக 556 கோடி யுவான் அளவு குறைந்துள்ளது.
இது குறித்து, தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் விலைவாசி பிரிவின் அலுவலர் சாங் மன்யிங் கூறியதாவது
2017ஆம் நாள், முழு நாட்டிலும் மின்சார விலைவாசியைக் குறைப்போம் என்றார் அவர்.
தற்போது, பாரம்பரிய எரியாற்றல் அளவுக்கு மீறியுள்ளது. ஆனால், காற்றாற்றல் மின்சாரம் உள்ளிட்ட பசுவை எரியாற்றல் போதாது. இயற்கை எரிவாயு நுகர்வு விரிவாக்கப்பட தேவைப்படும். பசுமையான எரியாற்றல், பாரம்பரிய எரியாற்றலுக்குப் பதிலாக முக்கிய சக்தியாக இருக்க, இன்னும் நீண்டகாலம் தேவைப்படும். தேசிய எரியாற்றல் பணியகத்தின் திட்ட பிரிவின் துணை தலைவர் ஹெ யுங்ஜியன் கூறியதாவது
நிலக்கரியின் பயன்பாடு ஆண்டுதோறும் 70 முதல் 80 கோடி டன் வரை இருக்கிறது. இது உலக சராசரிநிலையை பெரிதும் தாண்டியுள்ளது. நிலக்கரியை கைவிட்டு, இயற்கைவாயு, மின்சாரம் முதலியவற்றை பயன்படுத்தினால் அதிக கொள்கை ஆதரவு மற்றும் அடிப்படை வசதிகள் தேவைப்படும் என்றார் அவர்.
சீனாவின் 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் எரியாற்றல் பகுதி வகுக்கப்படும். மின்சார தொழிலின் பசுமையான வளர்ச்சி, அடுத்த ஐந்தாண்டுகளிலான முக்கிய பணியாக கொள்ளப்படும். தேசிய எரியாற்றல் பணியகத்தின் துணை தலைவர் சேன் சாஜியெ கூறியதாவது
மின்சார கட்டமைப்பை மேம்படுத்துவோம். சேவை நிலையை உயர்த்துவோம், தூய்மையான, பாதுகாப்பான நவீன மின்சார தொழில் முறைமையை நிறுவுவோம் என்றார் அவர்.