ஜி20 அமைப்பின் 11ஆவது உச்சி மாநாடு, வரும் செப்டம்பர் 4, 5 ஆகிய நாட்களில் சீனாவின் சேஜியாங் மாநிலத் தலைநகர் ஹாங்சோவில் நடைபெறும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் இன்று 15ஆம் நாள் அறிவித்தார்.
20 நாடுகள் குழுவின் உறுப்பு நாடுகள் மற்றும் விருந்தினர் நாடுகளின் தலைவர்களும், சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும் அழைப்பின் பெயரில் இம்மாநாட்டில் பங்கேற்பார்கள். இதில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கலந்து கொண்டு, உச்சி மாநாட்டிற்கு தலைமைத் தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, உச்சி மாநாட்டிற்கான பல்வகை ஆயத்த பணிகள் சுமுகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சீன வெளியுறவுத் துறை, நிதித் துறை, மத்திய வங்கி, ஹாங்சோ அரசு ஆகியவற்றின் பொறுப்பாளர்கள், தெரிவித்துள்ளனர். உலகப் பொருளாதார வளர்ச்சி, சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு, உலக பொருளாதார ஆட்சி ஆகியவற்றுக்கு ஹாங்சோ உச்சி மாநாடு, புதிய எதிர்காலத்தை திறந்து வைத்து, புதிய உந்து சக்தியைக் கொண்டு வரும் என்பதை சீனா எதிர்பார்க்கிறது.
சீன வெளியுறவுத் துறை துணை அமைச்சர் லீ பாவ்தோங் 15ஆம் நாள் பன்னாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில்,
உச்சி மாநாட்டில் ஜி20 அமைப்பின் வளர்ச்சித் திட்ட வரைவை வகுப்பது மூலமாக, உலகப் பொருளாதாரம் அதிகரிக்கும் சக்தி பற்றாக்குறைப் பிரச்சினையை அடிப்படையில் தீர்க்க விரும்புகின்றோம். கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தத்தை முன்னேற்றுவதன் மூலமாக, உலகப் பொருளாதாரம் வலிமையான, தொடரவல்ல மற்றும் சமமான முறையில் வளர்ந்து வருவதற்கு புதிய திட்டத் தீர்வை வழங்க விரும்புகின்றோம். உலக பொருளாதார மற்றும் நிதித் துறையின் ஆட்சிமுறையை முழுமைப்படுத்தி, சர்வதேச நாணய நிறுவனங்களின் சீர்திருத்தங்களை முன்னேற்றி, நிதி, வரி, எரியாற்றல், ஊழல் எதிர்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புகின்றோம். வளர்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்தி, 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதில் தலைமை பங்களித்து, வளரும் நாடுகள் கூட்டாக வளர்வதற்கு புதிய எதிர்காலத்தை திறந்து வைக்க விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.
நிதிக் கொள்கையில் விரிவான கொள்கைள் தொடர்பான ஆலோசனைகளை பல்வேறு தரப்புகளும் தற்போது வரை உருவாக்கி, உச்சி மாநாட்டிற்கு அதை வழங்கவுள்ளன என்று சீன நிதித் துறை துணை அமைச்சர் சு குவாங்யாவ் தெரிவித்தார்.
மேலும், ஒட்டுமொத்த பொருளாதார நிலையின் ஆய்வு மற்றும் முன்மதிப்பீடு, கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளை வலுப்படுத்துவது குறித்து, பல்வேறு தரப்புகளும் முக்கிய ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளன என்று சீன மத்திய வங்கியின் துணைத் தலைவர் யீ காங் வலியுறுத்தினார்.