பெய்ஜிங் நேரப்படி 17ஆம் தேதி இரவு ரியோ ஒலிம்பிக்கின் ஆடவர் ஒற்றையார் இறகுப்பந்து கால் இறுதி ஆட்டத்தில், சீன வீரர் லின் டான் 2-1 என்ற கணக்கில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கதாம்பியைத் தோற்கடித்து, அரை இறுதிக்கு முன்னேறினார்.
தற்போது உலக தரவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்த் கதாம்பி 1993ஆம் ஆண்டில் பிறந்தார். முன்னணி வீரர்களுடன் போட்டியிடும் திறமையை அவர் கொண்டுள்ளார். முன்பு நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அவர் 2-0 என்ற கணக்கில் உலக தரவரிசையில் 5ஆவது இடம் வகிக்கும் டென்மார்க் வீரர் ஜான் ஜோர்கென்சன்னைத் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.