சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 17ஆம் நாள் பெய்ஜிங்கில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். கொள்கை, அடிப்படை வசதிகளின் கட்டுமானம், வர்த்தகம், நிதி, அரசு சாரா பரிமாற்றம் முதலிய துறைகளில் சீனா பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைத்து மக்களுக்குப் பயன் தர வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பட்டுப்பாதைப் பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூறாண்டு கடல்வழி பட்டுப்பாதை திட்டப்பணி பற்றிய முக்கிய முன்மொழிவை சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங் 2013ஆம் ஆண்டு மத்திய ஆசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் பயணம் மேற்கொண்ட போது முன்வைத்தார். வெளிநாடுகளுக்குத் திறைந்து வைக்கும் சீனாவின் புதிய பொருளாதார அமைப்புமுறை மற்றும் பொருளாதாரத் தூதாண்மைக் கொள்கையான இந்தத் திட்டம், ஐரோப்பிய-ஆசிய கண்டத்தில் வசிக்கும் சுமார் 440 கோடி மக்களுக்கு தொடர்புடையது. அதன் ஒட்டுமொத்த பொருளாதார அளவு 23இலட்சம் கோடி அமெரிக்க டாலராக இருக்கும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டம், முழு உலகத்துடன் குறிப்பாக ஐரோப்பிய-ஆசிய நாடுகளுடன் வளர்ச்சியின் கனிகளைப் பகிர்ந்து கொள்ளும் சீனாவின் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று பல நாடுகளின் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் ஷி ச்சின்பீங் பேசுகையில், இதுவரை 100க்கும் மேலான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இக்கட்டுமானத்தில் பங்கேற்றுள்ளன. 30க்கும் மேலான நாடுகளுடன் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையைக் கூட்டாக கட்டியமைக்கும் ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டு 20க்கும் மேலான நாடுகளுடன் பன்னாட்டு உற்பத்தி ஆற்றல் துறையிலான ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றோம் என்று கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது
குறிப்பாக உலகப் பொருளாதார வளர்ச்சி மிக தாழ்ந்த நிலையில் இருந்த நிலையில், மாபெரும் உற்பத்தி ஆற்றல் மற்றும் கட்டுமான ஆற்றலுடன், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெருகிலுள்ள நாடுகளில் தொழில் மயமாக்கம், நவீன மயமாக்கம், அடிப்படை வசதிகளின் கட்டுமானம் ஆகியவற்றுக்கான தேவையை நிறைவேற்றுவது, தற்கால உலகப் பொருளாதாரத்தின் நிதானத்துக்குத் துணை புரியும் என்று அவர் கூறினார். மேலதிக நாடுகளும் பன்னாட்டு அமைப்புகளும் சீனாவுடன் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.