• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி: வியப்பு, தனிச்சிறப்பு, எதிர்பார்ப்பு
  2016-08-22 16:51:48  cri எழுத்தின் அளவு:  A A A   

2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, உள்ளூர் நேரப்படி 21ஆம் நாள் முடிவடைந்தது. அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகிய நாடுகள், தங்கப் பதக்க வரிசையில் முதல் 3 இடங்களை வகிக்கின்றன.
இருப்பினும், விளையாட்டுகளைத் தவிரவும், நடப்பு ஒலிம்பிக் போட்டியில், வியப்பான சாதனையைப் படைத்த அமெரிக்க வீரர், சீன வீரரின் முக உருவம், இந்திய வீரரின் எதிர்பார்ப்பு ஆகிய வண்ண மலர்கள், மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன.

அமெரிக்க நீச்சல் வீரரான பெல்ப்ஸ் தொடர்ந்து 5 முறை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, மொத்தம் 23 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் வியப்பான பதிவை உருவாக்கியவர் இவர் ஆவர்.
இளமை, மனமகிழ்ச்சி மற்றும் பெருமிதம் நிறைந்திருக்கும் முகஉருவத்தால் சீன நீச்சல் வீராங்கனை ஃபு யுவான்ஹுய் என்பவர் ரியோவில் புகழ்பெற்று ரசிகர்களுக்கு ஆழ்ந்த மற்றும் தனிச்சிறப்பான மனப்பதிவை ஏற்படுத்தினார்.போட்டியில் அவரது செயல்பாடு, ஒலிம்பிக் கண்ணோட்டத்தை நன்றாக வெளிக்காட்டியது.

இந்திய வீராங்கனை புசார வன்காடா சிந்து, சாக்சி மாலிக், இந்திய பிரதிநிதிக் குழு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களைப் பெற்றனர். இவர்கள், இந்திய விளையாட்டுத் துறையில் எதிர்பார்க்கத்தக்க நட்சத்திரமாக ஒளிர்வார்கள்.
விளையாட்டு வீரர்கள் அனைவரும், பெரும் முயற்சி மேற்கொண்டு, நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒலிம்பிக் அரங்கில் பங்கேற்க வாய்ப்புண்டு. குறுகிய காலம் நீடிக்கும் போட்டியில் இவர்கள், உலக நட்சத்திரமாக ஒளிர்வர்.

அடுத்த 4 ஆண்டுகளில், மேலும் வேகமாக மேலும் வலிமையாக இருப்பது என்ற ஒலிம்பிக்குறிக்கோளைப் பின்பற்றி, விளையாட்டு வீரர்கள் தங்களை தங்களே ஊக்குவித்து கொண்டு வரட்டும்.
அடுத்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சந்திப்போம். வணக்கம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040