அதற்குப் பிறகு, ஷிச்சின்பீங், வாகனத்தின் மூலம் 60 கிலோமீட்டர் பயணித்து ச்சிங்காய் யான்ஹூ ஏரி தொழிற்துறை நிறுவனத்தின் ஜியாஃபேய் கிளை நிறுவனத்தின் கப்பல் துறையை பார்வையிட்டார். அங்கு அவர் பேசுகையில், சுழற்சிப் பயன்பாடு, பொருளாதார வளர்ச்சி முறைமையை மாற்றும் கோரிக்கையாகும். முழு சீனா இத்தகைய பாதையில் நடைபோட வேண்டும். இத்துறையில் ச்சிங்காய் மாநிலம் செவ்வனே செய்து, மாதிரிப் பங்கு ஆற்ற வேண்டும். ச்சிங்காயின் வளம், முழு நாட்டின் வளமாகும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முன்நிபந்தனையில், வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை நன்றாக மேற்கொள்ள வேண்டும் என்று ஷிச்சின்பீங் கூறினார்.
2004ஆம் ஆண்டு நவம்பர் திங்கள், டாங்குலா மலை வட்டத்தின் 128 குடும்பங்களும், 407 ஆயர்களும், மூன்று ஆறுகள் ஊற்றுமூலம் உயிரின வாழ்க்கைப் பாதுகாப்புக் கொள்கையைப் பின்பற்றி, இப்பகுதியிலிருந்து கேஏர்மூ நகரிலுள்ள குடிபெயரும் இடத்திற்கு குடியேறினர். 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள், குடிபெயர்தல் கிராம், டாங்குலா மலை வட்டத்தின் சாங்ஜியாங்யுவான் கிராமமாக மாறியுள்ளது. 22ஆம் நாள், ஷிச்சின்பீங்கின் வருகையை, இந்த திபெத்தின கிராமம் ஆரவாரமாக வரவேற்கின்றது.
கிராமவாசி ஷென்கே கூறுகையில்,
குடிபெயரும் முன், நாங்கள் கடல் மட்டத்திலிருந்து 4700 மீட்டர் உயரமுள்ள இடத்தில், கூடாரங்களின் கீழ், தரையில் தூங்கினோம். குடிபெயர்ந்த பிறகு, நடுவண் அரசு எங்களுக்கு புதிய வீடுகளைக் கட்டியமைத்துள்ளது. நாங்கள், புதிய வீட்டில் தங்கி, படுக்கையில் தூங்குகின்றோம். வீட்டு சாமான்களும் மின் சாதனங்களும் உள்ளன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் நன்றாக இருக்கின்றன. எமது வாழ்க்கை இன்பமாக உள்ளது என்று அவர் கூறினார்.