• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வெளிநாட்டு முதலீட்டு தடையைத் தணிவு செய்யும் சீனா
  2016-08-24 16:15:00  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனா வெளிநாட்டு முதலீடு மீதான தடையைத் தணிவு செய்யும் என்று சீன துணை வணிக அமைச்சர் வாங் சோவன் 23ஆம் நாள் தெரிவித்தார்.

நாடளவில் இதை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கையை சீனா ஆராய்ச்சி செய்து வருகிறது என்று அவர் கூறினார்.

தற்போது சீனாவில் வெளிநாட்டு முதலீட்டு தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 50 ஆயிரமாகும். வெளிநாட்டு முதலீட்டு பயன்பாடு ஒரு இலட்சத்து 72 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது. இது, தொடர்ந்து 24 ஆண்டுகளாக வளரும் நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. தவிர, வெளிநாட்டு முதலீட்டுப் பயன்பாட்டின் தரமும் நிலையும் பெரிதும் மேம்பட்டுள்ளது. இது குறித்து வாங் சொவன் மேலும் கூறியதாவது

இவ்வாண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை, சீனா மிக முக்கிய முதலீட்டு இலக்கு நாடாக தொடர்ந்து இருக்கும். சீன-அமெரிக்க வணிக சம்மேளனம், சீன-ஐரோப்பிய வணிக சம்மேளனம், ஜப்பான்-சீன முதலீட்டு முன்னேற்ற அமைப்பு முதலியவை நடத்திய ஆய்வு நம்பிக்கை ஆர்வத்தைக் காட்டியுள்ளது என்றார் அவர்.

சீனாவின் பாதியளவு வெளிநாட்டு வர்த்தகம், 25 விழுக்காடு தொழிற்துறை உற்பத்தி மதிப்பு, 20 விழுக்காடு வரி வசூலிப்பு, 14 விழுக்காடு நகர்புற வேலைவாய்ப்புகள் ஆகியவை, வெளிநாட்டு முதலீட்டுத் தொழில்நிறுவனங்களால் தான் உருவாக்கப்பட்டன.

இவ்வாண்டின் முதல் 7 திங்களில், சீனாவிலான வெளிநாட்டு தொழில்நிறுவனங்களின் எண்ணிக்கையும் வெளிநாட்டு முதலீட்டு பயன்பாடும் முறையே 9.7 விழுக்காடு மற்றும் 4.3 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆனால் ஜூலை திங்கள், மட்டும் இவ்விரு தொகைகள் குறைந்தன.

உலகளவில், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் போட்டி மிகவும் வன்மையாக உள்ளது. அடுத்த கட்டத்தில், சீனா ஒழுங்கு முறைமையை மேலும் எளிதாக்கும். வெளிநாட்டு முதலீடு நுழையும் கட்டுபாட்டைக் குறைப்பது குறித்து வாங் சோ வென் கூறியதாவது

கல்வி, பண்பாடு, நிதி, ஆக்கத்தொழில் முதலிய துறை, வெளிநாட்டு முதலீட்டை மேலும் பெருமளவில் வரவேற்கும். தொடர்புடைய கொள்கையை, தாராள வர்த்தக மண்டலத்தில் சோதனை செய்த பிறகு, முழு நாட்டிலும் பரவல் செய்வோம். தவிர, வெளிநாட்டு முதலீடு பற்றிய நிர்வாக முறைமையை சீன அரசு மேம்படுத்தும் என்றார் அவர்.

தவிரவும், சீனா வெளிநாடுகளில் நடத்திய நேரடி முதலீடும் விரைவாக அதிகரித்து வருகிறது. இத்தொகை, சீனா பயன்படுத்திய வெளிநாட்டு முதலீட்டுத் தொகையைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040