• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஜி20 உச்சி மாநாடு பங்களிப்பது
  2016-08-25 14:40:56  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜி20 அமைப்பின் 11ஆவது உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 4, 5 ஆகிய நாட்களில் சீனாவின் ஹாங் சோ நகரில் நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு, ஜி20 பற்றிய விவாதங்கள் அமெரிக்காவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. 2008ஆம் ஆண்டு நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு, உலகப் பொருளாதாரம் அதிகரிக்கும் முன்னேற்றப் போக்கு மந்தமாகி வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் சமமற்ற நிலை நிலவுகிறது. மேலும், பொருளாதார வீழ்ச்சியடையும் இடர்பாடு உள்ளது. இது பற்றி அமெரிக்க வெள்ளைமாளிக்கையின் சர்வதேசப் பொருளாதாரத் துறைக்கான தேசிய பாதுகாப்புத் துணை ஆலோசகர் வல்லி ஓ அடேயெமோ முன்பு ஓர் ஆய்வுக் கூட்டத்தில் பேசுகையில், பயன்மிக்க கொள்கைகளை அரசு மேற்கொள்ளாமல், தனியார் நிறுவனங்களின் முதலீட்டை ஊக்குவிப்பது கடினமானது. இந்நிலையில், பல்வேறு தரப்புகளும் ஜி20 உச்சி மாநாட்டில், பொருளாதார தொடரவல்ல வளர்ச்சிக்கான கட்டுக்கோப்பை வரைவது பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறினார்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், பல நாடுகள் தொடர்ந்து வட்டி விகிதத்தைக் குறைத்து வந்துள்ளன. சில நாடுகள், எதிர்மறை வட்டி விகிதத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்த கொள்கை, பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய பாதிப்பு என்பது பற்றி இது வரை தெரியவில்லை. மேலும், வர்த்தக பாதுகாப்புவாதம் மீண்டும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், நாணய கொள்கைகளை வகுப்பதில் வாய்ப்பு குறைவு. ஆனால், பன்னாடுகளிடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையில் அதிக ஒத்துழைப்பு வாய்ப்பு உண்டு. ஜுலை 20ஆம் நாள் நிறைவடைந்த ஜி20 வர்த்தகத் துறை அமைச்சர்களின் கூட்டத்தில், உலக வர்த்தகம் மற்றும் பொருளாதார தொடரவல்ல வளர்ச்சி குறித்து பல உடன்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது பற்றி அடேயெமோ கூறியதாவது

வர்த்தக அமைச்சர்களின் கூட்டத்தில் கிடைத்த சாதனைகள் எங்களுக்கு ஊக்கம் தந்துள்ளன. ஒப்பந்தத்தின் படி, சந்தையின் செயல்திறனை வலுப்படுத்தி, நியாயமான நிலையை மேம்படுத்தும் வகையில் ஜி20 உறுப்பு நாடுகள் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளும். எதிர்காலத்தில், உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்கவும், உலகத் தீர்வுத் திட்டங்களை தொடர்ந்து வகுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ஹாங்சோ உச்சி மாநாட்டில் சர்வதேச பிரச்சினைத் தீர்வுக்காக சீன-அமெரிக்க ஒத்துழைப்பின் முக்கியத்துவம் என்பதை அல்ப்ரைட் ஸ்டான்ப்ரைஜ் நிறுவனத்தின் உயர் மேலாளர் ஏமி செலிகா அம்மையார் வலியுறுத்தினார்.

இவ்வாண்டு, ஹாங்சோ ஜி20 உச்சி மாநாட்டில், மூன்று கோணங்களில் இருந்து புதிய முன்னேற்றங்களை அடைய முயற்சி எடுக்கப்படும். அதாவது, புதிய படைப்பு மூலம் புதிய உந்து சக்தியை தேடுவது, சீர்திருத்தம் மூலம் புதிய உயிராற்றலை ஊட்டுவது, வளர்ச்சி மூலம் புதிய எதிர்காலத்தை திறந்து வைப்பது ஆகியவை முக்கிய இலக்குகளாகும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040