• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷீச்சின்பீங், சீனாவின் ஒலிம்பிக் பிரதிநிதிக்குழுவினர்களைச் சந்தித்துப் பாராட்டினார்
  2016-08-26 16:17:39  cri எழுத்தின் அளவு:  A A A   
25ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன அரசுத்தலைவர் ஷீச்சின்பீங், 31ஆவது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான சீனப் பிரதிநிதிக்குழுவின் உறுப்பினர் அனைவரையும் சந்தித்தார். லியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீன வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் தலைச்சிறந்த சாதனைகளை அவர் பாராட்டினார். ஒலிம்பிக் எழுச்சி, சீனத் தேசத்தின் விளையாட்டு எழுச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து வெளிக்கொணர்ந்து, விளையாட்டுப் போட்டியில் சீனாவின் ஒட்டுமொத்த ஆற்ற்லை மேலும் உயர்த்துவதுடன் பொது மக்கள் விளையாட்டு வளர்ச்சியை வலிமையாக முன்னேற்றுவிக்க வேண்டும் என்றும் ஷீச்சின்பீங் விருப்பம் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட சீனப் பிரதிநிதிக்குழுவின் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 800 பேர் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் ஒன்றுகூடி மகிழ்ந்தனர். சீன அரசுத்தலைவர் ஷீச்சின்பீங், தலைமையமைச்சர் லீ க்கெச்சியாங் முதலிய தலைவர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பிறகு ஷீச்சின்பீங் உற்சாகமான உரையை வழங்கியனார்.

ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீன வீரர்களும் வீராங்கனைகளும் பெற்றுள்ள தலைச்சிறந்த சாதனைகள், ஒலிம்பிக் எழுச்சியைும், சீனத் தேசத்தின் விளையாட்டு எழுச்சியையும் உயிர்த்துடிப்புடன் எடுத்துக்காட்டியுள்ளன. சீன மக்களின் மனப்பூர்வமான நாட்டுப்பற்றுணர்வையும், உலகளவில் வாழும் சீனர்களின் தேசிய பெருமையையும் ஊக்குவித்துள்ளன என்று அரசுத்தலைவர் ஷீச்சின்பீங் சுட்டிக்காட்டினார்.

அவர் பேசுகையில், விளையாட்டுப் போட்டியிலும் விளையாட்டுத் திடலின் வெளியிலும் சீன வீரர்கள் பெற்றுள்ள சாதனைகளும், எடுத்துக்காட்டியுள்ள எழுச்சியும் தற்போதைய சீனர்கள் குறிப்பாக தற்போதைய சீன இளைஞர்களின் தனிச்சிறப்பியல்பை வெளிப்படுத்தியுள்ளன. போட்டியில் தங்க பதக்கங்களைப் பெற்றவர்களைப் பாராட்டினேன். அதேவேளை பதக்கங்களைப் பெறாத வீரர்கள் முழுமூச்சுடன் முயற்சி செய்துள்ள செயலையும் பாராட்டினேன். நீங்கள் அனைவரும் வீரஞ்செறிந்தவர்கள் என்று குறிப்பிட்டார்.

விளையாட்டு என்பது, சமூக வளர்ச்சி மற்றும் மனித முன்னேற்றத்தின் முக்கிய குறியாகவும், நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றல் மற்றும் மென் ஆற்றலின் முக்கிய வெளிப்பாடாகும் என்று ஷீச்சின்பீங் வலியுறுத்தி கூறினார்.

ஷீச்சின்பீங் தமது உரையின் கடைசியில், 2022ஆம் ஆண்டின் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் குளிர்கால ஊனமுற்றவர்களுக்கான பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040