• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜி20 உச்சி மாநாட்டுக்கு சீனாவின் பங்கு
  2016-08-27 18:27:10  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.நா. தலைமைச் செயலாளர் பான் கிமூன் 26ஆம் நாள் ஐ.நா. தலைமையகத்தில் பேட்டியளித்த போது, ஜி20 அமைப்பின் ஹாங்சோ உச்சி மாநாட்டுக்கு ஆயத்தம் செய்வதில் சீனா வெளிப்படுத்திய தலைமைப் பங்கினை வெகுவாக பாராட்டினார். நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் நாடான சீனா மேற்கொண்டு வரும் முயற்சிகளின் மூலம், ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு அனைத்தையும் உள்ளடக்கிய தன்மையுடன் புதிய உயரத்தை எட்டியுள்ளது என்று அவர் கருத்து தெரிவித்தார்.

2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலை இந்த உச்சி மாநாட்டின் திட்ட நிரலில் சீனா வெற்றிகரமாக சேர்த்துள்ளது. இதனால், ஜி20 அமைப்பின் வரலாற்றில் தொடரவல்ல வளர்ச்சி பற்றியும் காலநிலை மாற்றம் பற்றியும் ஒரேநேரத்தில் விவாதம் நடத்துவது இதுவே முதன்முறை. மேலும், ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகள் பாரிஸ் உடன்படிக்கைக்கு கூடியவிரைவில் ஒப்புதல் அளிப்பதற்கு ஹாங்சோ உச்சி மாநாடு வாய்ப்பாக அமையும் என்று பான் கிமூன் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040