• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவின் புதிய விண்வெளி ராக்கெட் எந்திர சோதனை வெற்றி
  2016-08-28 16:18:11  cri எழுத்தின் அளவு:  A A A   
புதிய விண்வெளி ராக்கெட் எந்திர சோதனையை இந்தியா ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இச்சோதனை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுமையத்தில் இஸ்ரோவால்

நிறைவேற்றப்பட்டது.

3 டன் எடையுள்ள இந்த ராக்கெட், முன்னேற்றமடைந்த தொழில்நுட்ப வாகனம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டின் எந்திரம், விண்வெளியில் உள்ள ஆக்சிஜன் உதவியுடன் எரிபொருளை ஆற்றலாக மாற்றும். இதனால், ராக்கெட்டின் எடை குறைவதுடன், ஆற்றல் அதிகரிக்கும். மேலும், ராக்கெட் செலுத்துவதற்கான செலவும் வெகுவாகக் குறையும்.

இதற்குமுன், இத்தகைய சிறப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் பட்டியலில் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் இடம் பெற்றிருந்தன. தற்போது, இந்தியா இதில் இணைந்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040