அண்மையில் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இவ்வாண்டு உலகப் பொருளாதார அதிகரிப்பு மதிப்பீ்ட்டை குறைந்துள்ளன. அதிகரிப்பு முறையை புத்தாக்கம் செய்வது பற்றி, 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும். இந்த அம்சத்தைச் சீனா முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளது. இது சீனத் தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது. ஏனெனில், சீனாவின் 13ஆவது ஐந்தாண்டு திட்டத்தில், புத்தாக்கம், தேசிய வளர்ச்சிக்கான முக்கியக் கொள்கையாக இருந்தது. இது குறித்து, சீன நவீன சர்வதேச உறவு ஆய்வகத்தின் ஆய்வாளர் சேன் ஃபங் யீங் பேசுகையில், வளர்ச்சி முறை புத்தாக்கத்திற்குச் சீனா முதன்முறையாக முன்னுரிமை கொடுப்பது, புதிய தொழிற்துறை புரட்சி,
டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றை வாய்ப்பாக கொண்டு, புத்தாக்கத்தைத் தூண்டி, உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு புதிய திட்டத்தை வகுப்பதற்காகும் என்று தெரிவித்தார்.
கட்டமைப்புச் சீர்திருத்தம், நடப்பு உச்சி மாநாட்டில், அதிகரிப்பு முறையை புத்தாக்கச்செய்வதற்கான முக்கிய அம்சமாகும். கட்டமைப்பு சீர்திருத்தத்தை, நிதி மற்றும் நாணயக் கொள்கையுடன் சமமான இடத்தில் சேர்ப்பதன் மூலம், நடப்பு உச்சி மாநாட்டில், கட்டமைப்பு சீர்திருத்தம் மூலம் உலகப் பொருளாதாரக் கட்டுப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என சீனா எதிர்பார்ப்பதாக சீன ரென்மின் பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் நாணயக் கல்லூரியின் துணை தலைவர் சாவ் சி ஜுன் கருத்து தெரிவித்தார்.
உலகப் பொருளாதாரம் மற்றும் நாணயக் கட்டுப்பாட்டுச் சீர்திருத்தத்தை வி்ரைவுப்படுத்த சீனா பாடுபட்டு வருகிறது. நடப்பு உச்சி மாநாட்டில் மேலும் பயன்மிக்க உலகப் பொருளாதார மற்றும் நாணயக் கட்டுப்பாட்ட்டில் பெரும் கவனம் செலுத்தப்படும். இதற்காக, சர்வதேச நாணயக் கட்டுக்கோப்புக்கான பணிக்குழுவை சீனா மீண்டும் உருவாக்கி, மேலும் நிதானமான சர்வதேச நாணய கட்டுக்கோப்பை நிறுவுவதை தூண்டியுள்ளது. நடப்பு உச்சி மாநாட்டில் உலகப் பொருளாதார மற்றும் நாணயக் கட்டுப்பாடு தொடர்பான சீர்திருத்தத்தை முன்னேற்றுவது குறித்து தமது கருத்தை சீனா முன்வைக்கும் என்று சாவ் சி ஜூன் தெரிவித்தார்.
சீனாவின் முயற்சியுடன், நடப்பு உச்சி மாநாட்டில், வளர்ச்சி பிரச்சினை, உலக ஒட்டுமொத்த கொள்கை கட்டுக்கோப்பில் முதன்முறையாக முக்கிய இடத்தில் வைக்கப்படும். இணக்கமான மற்றும் இணைப்பான வளர்ச்சியை நனவாக்கும் பொருட்டு, 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவது தொடர்பாக செயல் திட்டத்தை வகுப்பது இதுவே முதன்முறையாகும். 20 நாடுகள் குழுவின் வரலாற்றில், வளரும் நாடுகள் மிகவும் அதிகமாக பங்கெடுக்கும் உச்சி மாநாடாக ஹாங்சோ உச்சி மாநாடு மாறும்.