பணம் இல்லாமல், கைபேசி மூலம் மட்டும், சீனாவின் எந்த நகரத்தில் அன்றாட வாழ்க்கை தடையின்றி தொடர்ந்து வருகிறது ?அது, ஹாங்சோ நகரம் என்பது உறுதி.
உலகளவில் கைபேசி மூலம் பணம் செலுத்துவதற்கான மிகப் பெரிய நகர், ஹாங்சோ தான். இந்நகரில், 98 விழுக்காடு வகிக்கும் வாடகை வாகனங்களிலும், 95 விழுக்காட்டுக்கும் மேலான கடைகளிலும், 50க்கும் மேற்பட்ட உணவு விடுதிகளிலும், கைபேசி மூலம் பணம் செலுத்தப்பட வாய்ப்புண்டு. காய்கறிகளை விற்கும் சிறிய சந்தையிலும், கைபேசி மூலம் பணம் செலுத்தும் வசதி கிடைத்துள்ளது.
பெய்ஜிங் மற்றும் சென்சென் மாநகரங்களுடன், ஹாங்சோ, சீனாவில் தொழில் தொடங்கும் முக்கிய மையமாகும். இதற்கிடையில், அண்மைக்காலத்தில், ஹாங்சோ மிக விரைவாக வளர்ந்து வருகிறது. தவிரவும், இணைய வர்த்தக நகர், விரைவு அஞ்சல் நகர், இணைய நிதியின் மையம் ஆகிய பெருமை ஹாங்சோவுக்கு கிடைத்துள்ளது. சீனாவில் புதிய பொருளாதாரத்தை வளர்ப்பதன் முன்மாதிரியாக, ஹாங்சோ கருதப்படுகிறது. ஹாங்சாவின் பொருளாதாரச் சமூக வளர்ச்சியில், "இணையச் சிந்தனை" முக்கிய பங்களிப்பை ஆற்றியுள்ளது.