• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஜி20
  2016-08-29 16:37:55  cri எழுத்தின் அளவு:  A A A   

முதல் கேள்வி: யார் யார் உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்கள்?

ஜி20 பற்றிய பொது அறிவுகளை உங்களுக்குப் பரப்புரை செய்கின்றோம். ஜி20 அமைப்பில் 20 உறுப்பினர்கள் அல்லது உறுப்பு பொருளாதார அமைப்புகள் இடம்பெறுகின்றன. 20 உறுப்பு நாடுகள் என அழைக்கப்படாதது. ஏன்? ஐரோப்பிய ஒன்றியம், நாடு என்ற தகுநிலை அல்லாமல், பொருளாதாரச் அமைப்பாக ஜி20 அமைப்பில் சேர்ந்துள்ளது.

உறுப்பினர்களைத் தவிர, வழக்கத்தின்படி, ஐ.நா. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு, பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு, நிதி நிலைப்புத்தன்மைக் குழு ஆகிய 7 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் ஆகியோர்களுக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்.

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்கும் நாடு சிறப்பு உரிமையை கொள்கிறது. அதாவது, ஒன்று அல்லது பல நாடுகளை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கலாம். எனவே, தலைமைப் பொறுப்பேற்கும் சீனா இவ்வாண்டு கசகஸ்தான் மற்றும் எகிப்து ஆகிய இரண்டு வளரும் நாடுகளை அழைத்துள்ளது.

அடுத்த கேள்வி; ஜி20 மாநாடு எத்தனை நாட்கள் நடைபெறும்?

ஜி20 உச்சி மாநாடு, செப்டம்பர் 4,5 ஆகிய இரண்டு நாட்கள் ஹாங்சோவில் நடைபெறும். இருப்பினும், ஜி20 குறித்த பல்வகை மாநாடுகளும் நிகழ்வுகளும் 2016ஆம் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. திட்டப்படி, சீனாவின் 20 நகரங்களில் 60க்கும் மேற்பட்ட பல்வகை மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. மே திங்கள் தொடங்கி, வேளாண்மை, ஆற்றல், வேலைவாய்ப்பு, வர்த்தகம் முதலான துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் கூட்டம் அடுத்தடுத்து நடத்தப்பட்டுள்ளன. தவிரவும், மகளிர் கூட்டம், சிந்தனைக் கிடங்குக் கூட்டம், இளைஞர்கள் கூட்டம் ஆகியவையும் நடைபெற்றுள்ளன. அவற்றின் மூலம், வேறு துறைகளிலும் வேறு கோணங்களிலும், ஹாங்சோ உச்சிமாநாட்டிற்குத் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

அடுத்த கேள்வி:ஜி20 மாநாட்டில் விவாதிக்கப்படும் அம்சங்கள் எவை?

உலகப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி, சர்வதே பொருளாதார ஒத்துழைப்பை முன்னெடுப்பது, ஜி20 அமைப்பின் கடமையாகும். இதில், நிதி, வர்த்தகம், முதலீடு முதலியவை குறித்து விவாதிக்கப்படும். இவ்வாண்டு இரண்டு சிறப்பு அம்சங்கள் கூடுதலாக விவாதிக்கப்படும். அதோடு, வளர்ச்சிப் பிரச்சினை, உலக ஒட்டுமொத்தக் கொள்கைக் கட்டுக்கோப்பின் முனைப்பான இடத்தில் முதன்முறையாக வைக்கப்படுகிறது. அதனைப் போன்றே, 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்துவதைச் சுற்றி, செயல்பாட்டுத் திட்டங்களை வகுப்பதும் இதுவே முதல்முறையாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040