20 நாடுகள் குழு உச்சி மாநாடு, செப்டம்பர் திங்களின் துவக்கத்தில் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் ஐ.நா.தலைமைச் செயலாளர் பான் கி மூன் செய்தியாளருக்குப் பேட்டி அளித்தபோது, தொடரவல்ல வளர்ச்சி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட ஒட்டுமொத்த பிரச்சினைகளில் இம்மாநாடு கவனம் செலுத்துவதையும் அதற்குரிய வழிகாட்டு தலை வழங்குவதற்காகவும் சீனாவிற்குப் பாராட்டு தெரிவித்தார். 2030-ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுக்கும் காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையின் செயல்பாட்டுக்கும் நடப்பு உச்சி மாநாடு உதவி வழங்க வேண்டும் என்று பான் கி மூன் விருப்பம் தெரிவித்தார்.
புத்தாக்கம், உயிராற்றல், இணைப்பு, இணக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ள உலகப் பொருளாதாரத்தை உருவாக்குவது என்பது, நடப்பு உச்சி மாநாட்டின் தலைப்பாகும். இதில், இணக்கம் மற்றும் கூட்டு வளர்ச்சி நடப்பு உச்சி மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படும் அம்சமாகும். தெளிவற்ற உலகப் பொருளாதார எதிர்காலம், வர்த்தக பாதுகாப்புவாதம் தலைதூக்கி வருவது ஆகியவற்றின் பின்னணியில், நடப்பு உச்சி மாநாட்டின் தலைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.
பான் கி மூன் பேசுகையில், 20 நாடுகள் குழுவின் உறுப்புகள், உலகில் மிக அதிகமான மூல வளம் மற்றும் நிதி கொண்ட பொருளாதார நாடுகள் மற்றும் பிரதேசங்கள் ஆகும். இதனால், பொருளாதார இன்னல் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சினைகளைச் சமாளிப்பது குறித்து, நடப்பு உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
தவிர, தொடர்வல்ல வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய பிரச்சினைகள், நடப்பு உச்சி மாநாட்டில் மைய அம்சங்களாக விவாதிக்கப்படும். சீனாவின் முயற்சியில், 20 நாடுகள் குழு, குறுகிய கால உலக நிதி நெருக்கடி அம்சத்திலிருந்து, நீண்டகால உலக வளர்ச்சி பிரச்சினையில் கவனம் செலுத்துவதை இது அடையாளப்படுத்துவதாக பான் கி மூன் தெரிவித்தார்.
இது பற்றி பான் கி மூன் கூறியதாவது:
தொடரவல்ல வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை தொடர்பான பிரச்சினைகள் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படுவது ஜி 20 குழுவின் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும் என்றார்.
காலநிலை மாற்றம் பற்றிய பேச்சுவார்த்தையை முன்னேற்றும் முக்கிய தலைவரான பான் கி மூன், பல்வேறு உறுப்பு நாடுகள் வெகுவிரைவில் பாரிஸ் உடன்படிக்கையின் சட்ட ஒழுங்கு முறையை நிறைவேற்றுவதற்குரிய வாய்ப்பாக நடப்பு உச்சி மாநாடு மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.