செப்டம்பர் திங்கள் 4,5 ஆகிய நாட்களில், ஜி 20 உச்சிமாநாடு, சீனாவின் ஹாங்சோ மாநகரில் துவங்கவுள்ளது. தொடர்புடைய புள்ளிவிபரங்களின்படி, சுமார் 30 சாதனைகள் இக்கூட்டத்தில் உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஹாங்சோ மாநகரில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் சர்வதேசச் சமூகம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. ஜி 20 உலகளவில் மேலதிகமான பங்காற்றும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபுணர்கள் சிலர் கருதுகின்றனர்.
சீனா, ஜி 20 காலத்தில் நுழைந்துள்ளது. ஜி 20 என்பது இவ்வாண்டின் மிக முக்கியமான தூதாண்மை மேடையாக விளங்குகிறது. உலகில் மிகவும் வரவேற்கப்படும் கருத்தரங்குகளில் இது ஒன்றாகும். வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இடையிலான பயனுள்ள பரிமாற்ற மேடை இதுவாகும். சர்வதேச ஒத்துழைப்பையும் ஒன்றிணைப்பு வளர்ச்சியையும் இது விரைவுப்படுத்துகிறது. ஆனால், உலக வர்த்தக அதிகரிப்பு பலவீனமாகுவது, வர்த்தகப் பாதுகாப்புவாதம் தொடர்ந்து தலை தூக்குவது முதலிய காரணிகள், ஜி 20 எதிர்நோக்குகின்ற அறைகூவல்களாகும். பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு இடையேயான பொருளாதாரக் கொள்கைக்கான ஒன்றிணைப்பு, வர்த்தகப் பாதுகாப்புவாதத்தை எதிர்த்து, வெளிநாட்டுத் திறப்புச் சந்தையை உருவாக்குவது முதலியவை, ஜி 20 உச்சிமாநாட்டின் முக்கிய கடமையாகும். ஐரோப்பிய ஒன்றிய பிரதேச கமிட்டியின் முன்னாள் தலைமை செயலாளரும், ஐரோப்பிய கழகத்தின் சீனா பற்றிய நிபுணருமான பேராசிரியர் ஜெரால்டு ஸ்டால் அண்மையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தப் போது இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது
ஜி 20, உலகளவில் முக்கிய பங்காற்ற வேண்டும். உலகில் பெரிய நாடுகளுக்கிடையில் பொருளாதாரக் கொள்கையில் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்க வேண்டும். எடுத்துக்காடாக, சீனா, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் பிற வளரும் நாடுகள் உள்ளிட்டவை இதில் அடக்கம். தவிரவும், உலகப் பொருளாதாரத்தில் சர்வதேச வர்த்தகம் முக்கிய இடத்தை வகிக்கிறது. எனவே, வர்த்தக பாதுகாப்புவாதத்தை உறுதியாக எதிர்க்க வேண்டும். வெளிநாட்டுத் திறப்புச் சந்தையைக் கட்டியமைக்க வேண்டும். இது, ஜி 20 எதிர்நோக்குகின்ற ஒரு அறைகூவலாக திகழ்கிறது. உலகப் பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்துவது என்பது ஜி 20 அமைப்பின் இன்னொரு முக்கிய கடமையாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.