புத்தாக்கம், உயிராற்றல், இணைப்பு, இணக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ள உலகப் பொருளாதாரத்தை உருவாக்குவது, ஹாங்சோ நகரில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டின் தலைப்பாகும். புத்தாக்கம், உயிராற்றல், இணைப்பு, இணக்கம் ஆகிய நான்கு முக்கிய சொல்களைச் சீனா முன்வைத்ததற்கு காரணம் என்ன? தற்போதைய உலகப் பொருளாதாரம், எத்தகைய இன்னலை எதிர்நோக்கியுள்ளது? இது பற்றி தொடர்புடைய நிபுணர்கள் எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்தனர்.
உலகப் பொருளாதார மீட்சி, மந்தமாக இருக்கும் போக்கில் சிக்கிக்கொண்டுள்ளது. இதற்கு கட்டமைப்பு, பருவ நிகழ்வு ஆகியன முக்கிய காரணிகளாகும் என்று சீனாவின் ஃபு டன் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கல்லூரியின் பேராசிரியர் திங் ச்சுன் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"கட்டமைப்பு காரணி என்றால், கடந்த 20 ஆண்டுகளில் நிதித்துறையை முக்கியமாகக் கொண்ட பொருளாதாரத்தின் உலகமயமாக்கம் சீராக அதிகரித்து வந்த பிறகு, கட்டமைப்புத் தன்மை வாய்ந்த சரிப்படுத்தலில் நுழைந்துள்ளது. உலகமயமாக்கத்தின் பாதிப்பு படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நிதித் துறையின் அளவுசார் தளர்வு கொள்கையின் மூலம் உலகப் பொருளாதாரம், தேக்க நிலையிலிருந்து விடுபடுவதற்குத் துணை புரியவில்லை. இது கட்டமைப்புக்குரிய பிரச்சினையாகும். தவிர, பருவ நிகழ்வு பிரச்சினை இருக்கிறது. எடுத்துக்காட்டாக, அகதிகள், பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவற்றால், ஐரோப்பிய மக்கள் அல்லது தொடர்புடைய நாடுகளின் தேவைகள் குறிப்பிட்டத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ளன" என்றார் அவர்.
உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு இயக்கு ஆற்றல் எவ்வாறு மீட்டெடுக்கப்படும்? ஜி 20 உச்சி மாநாடு என்ற மேடை மூலம் இப்பிரச்சினைகள் குறித்து விவாதித்து ஒன்றிணைப்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று திரு திங் ச்சுன் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"ஜி 20 உச்சி மாநாட்டில், குறிப்பிட்ட அளவில் உலகப் பொருளாதாரம் குறித்து சரியான மதிப்பீடு செய்யப்பட முடியும். இதற்கு பின் உறுப்பு நாடுகள் பொதுக் கருத்துக்களை எட்டும். நடப்பு உச்சி மாநாட்டை உபசரிக்கும் நாடாக உள்ள சீனா, இவ்வுச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட அதிகமான அம்சங்களை ஆயத்தம் செய்துள்ளது. அவை, தற்போதைய உலகப் பொருளாதாரத்தின் நிலைமைக்கு ஏற்றதாக இருக்கின்றன. நிதி நெருக்கடி நிகழ்ந்த பிறகு, பல்வேறு நாடுகள் தளர்ச்சியான நாணயக் கொள்கையை முக்கியமாக பயன்படுத்தியுள்ளன. தேவை கொள்கை மற்றும் நாணயக் கொள்கை மட்டுமே, உலகப் பொருளாதார வீழ்ச்சி, குறைந்த வேக அதிகரிப்பு மற்றும் தேக்க நிலையிலிருந்து விடுபடுவதற்குத் துணை புரிய முடியாது என்பதை உண்மைகள் வெளிப்படுத்தியுள்ளன. இதனால், புத்தாக்கம் மற்றும் உயிராற்றலில் பெரும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்துகிறது" என்றார் அவர்.