• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பிரேசில் அரசுத் தலைவர்கள் சந்திப்பு
  2016-09-02 19:59:12  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2ஆம் நாள் ஹாங்சோ நகரில் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரேசில் அரசுத் தலைவர் மிஷேல் தெமேரைச் சந்தித்தார். அப்போது ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்திய பிரேசிலுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ரியோ பாரலிம்பிக் போட்டி வெற்றி பெறவும் ஷிச்சின்பிங் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், பிரேசிலின் எதிர்கால வளர்ச்சி மீதும், சீன-பிரேசில் ஒத்துழைப்பு மீதும் சீனா நம்பிக்கை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசுத் தலைவராகப் பதவியேற்ற பின் முதலில் சீனப் பயணம் மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் சீனாவுடன் பன்முக நெடுநோக்கு கூட்டுறவை வலுப்படுத்துவதற்கு பிரேசில் முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெமேர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040