• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பி20 உச்சி மாநாட்டின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சீனக் கொள்கை விளக்கம்
  2016-09-03 19:32:49  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜி20 குழுவில் உள்ள பி20 உச்சி மாநாடு சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 3ஆம் நாள் மாலை நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதன் துவக்க விழாவில் பங்கேற்று, சீன வளர்ச்சியின் புதிய துவக்கமும் உலக பொருளாதார வளர்ச்சியின் புதிய வரைவுத் திட்டமும் என்ற தலைப்பிலான உரையை நிகழ்த்தினார். சீனப் பொருளாதாரம், உலகப் பொருளாதாரம், உலகப் பொருளாதார ஆட்சிமுறை ஆகியவை தொடர்பான கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் ஷி ச்சின்பிங் உரையில் பன்முகமாக விளக்கிக் கூறினார்.

துவக்க விழாவில் சீனப் பொருளாதார வளர்ச்சி, சீனச் சீர்திருத்தம் உள்பட பல்வேறு எதிர்பார்புகளுக்கு ஷிச்சின்பிங் பதில் அளித்தார். இவ்வாண்டு துவக்கத்தில், பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 13ஆவது ஐந்தாண்டுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய சீனா, வரலாற்றில் புதிய துவக்கத்தில் நிற்கின்றது என்று அவர் குறிப்பிட்டார். இது பற்றி ஷி ச்சின்பிங் மேலும் கூறியதாவது

இந்த புதிய துவக்கம், சீனா சீர்திருத்தங்களை ஆழமாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உந்து சக்தியை அதிகரிப்பதன் புதிய துவக்கமாகும். சீனா, பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் புதிய சூழ்நிலையை ஏற்று, பொருளாதார வளர்ச்சி வழிமுறையை மாற்றும் புதிய துவக்கமாகும் என்று தெரிவித்தார்.

ஆனால், புதிய துவக்கத்தில், சீனப் பொருளாதாரம் எவ்வாறு செயல்படும் என்ற கேள்விக்கு ஷி ச்சின்பிங் பதில் அளித்தார். அதாவது, புதிய துவக்கத்தில், சீர்திருத்தத்தை பன்முகமாக ஆழாக்கி, மேலும் சீரான வளர்ச்சி எதிர்காலத்தை திறக்க நாங்கள் உறுதியாக செயல்படுவோம். புதிய காலத்தில், புத்தாக்கம் மூலம் வளர்ச்சியைத் தூண்டி, மேலும் வலுவான அதிகரிப்பு ஆற்றலை வழங்குவோம். புதிய துவக்கத்தில், தூய்மையான வளர்ச்சியை முன்னெடுத்து, தரமிக்க பயன்களை பெறுவோம். புதிய துவக்கத்தில், நீதி நேர்மையையும் சாதனைகளின் பகிர்வையும் முன்னேற்றி, மேலதிக பொது மக்களுக்கு நலன்களை ஏற்படுத்துவோம். புதிய துவக்கத்தில், வெளிநாட்டுத் திறப்பை விரிவாக்கி, மேலதிக அளவில் கூட்டாக வெற்றி பெறுவதை நனவாக்குவோம் என்று கூறினார்.

தற்போது, உலகப் பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் உள்ளது. அதேவேளையில், வர்த்தக பாதுகாப்புவாதம் மீண்டும் எழுகிறது. அரசியல் பாதுகாப்பு, அகதி நெருக்கடி, காலநிலை மாற்றம், பயங்கரவாதம் உள்ளிட்ட அறைகூவல்களால், உலகப் பொருளாதார வளர்ச்சியில் சிக்கலும் இடர்பாடும் தீவிரமாகியுள்ளன. இந்த நிலையில், சர்வதேச சமூகம், சீனா மீது எதிர்பார்ப்பு கொள்கின்றது. ஷிச்சின்பிங் தனது உரையில், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு 'சீன மருத்துவம்' என முன்மொழிந்தார். அவர் கூறியதாவது.

பல்வேறு நாடுகளுடன் இணைந்து , ஹாங்சோ உச்சி மாநாட்டில் பன்முகமான தீர்வு திட்டம் காண்பதை முன்னெடுக்க சீனா விரும்புகிறது. முதலில், புத்தாக்கத்தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரக் கட்டுமானம் மூலம், அதிகரிப்பதன் புதிய தோற்றத்தை தேடுவது, இரண்டாவது, திறந்த நிலையிலான உலகப் பொருளாதாரம் மூலம், வளர்ச்சி வாய்ப்புகளை விரிவாக்க வேண்டும். மூன்றாவது, கூட்டாக செயல்படும் உலகப் பொருளாதாரக் கட்டுமானம் மூலம், கூட்டு ஆற்றலைத் ஒன்றாக சேர்க்க வேண்டும். அனைத்தை உள்ளடக்கிய உலகப்பொருளாதாரக் கட்டுமானம் மூலம், கூட்டாக வெற்றி பெறும் அடிப்படையை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040