• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பலராம.சக்திவேல்: ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் திடமான பொருளாதார வளர்ச்சிப் பாதையை எட்ட திட்டம்
  2016-09-03 19:44:57  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் பழமையான நகரும் இயற்கை எழில் நிறைந்த நகருமான ஹாங்சோவில் ஜி- 20 நாடுகளின் உச்சி மாநாடு செப்டம்பர் 4 முதல் 5வரை நடைபெற உள்ளது. துவக்கத்தில் ஜி-8 நாடுகளாக அமெரிக்காவில் தொடங்கி செயல்பட்ட இந்த எட்டு நாடுகளின் குழு பின்னர் அடைந்த வளர்ச்சி தான் தற்போதைய ஜி- 20 என்பது.

ஹாங்சோவில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற உள்ளன. புதுமை ஆற்றல் உள்ளார்ந்த இணைப்பு திடமான முன்னேற்றம் ஆகியவற்றின் மூலம் உலகப் பொருளாதாரத்தை முன்னேடுத்து செல்லுதல் என்பது இம்மாநாட்டின் வாசகம் ஆகும்.

உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பை முன்னெடுப்பது ஆகியவை இம் மாநாட்டில் முன்னெடுக்கப்படும் முக்கிய அம்சங்களாக உள்ளது, ஜி – 20 நாடுகள் உலக அளவில் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றி வருகின்றன, இவற்றின் மொத்த தேசிய உற்பத்தி மதிப்பு உலகின் மதிப்பில் 85 விழுக்காடு என்ற அளவில் உள்ளது, இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை மூன்றில் இரண்டு மடங்காக உள்ளது.

ஒத்துழைப்பின் மூலம் உலகப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வளர்ந்த நாடுகளுக்கும் புதிதாக வளரும் நாடுகளுக்கும் இடையே ஆக்கபூர்வமான விவாதங்களின் மூலம் பொருளாதாரத்தை வளர்ப்பது இம் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்,

உலக பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தை சரியான திசையில் செயல்படுத்துதல் உலக நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டுமுயற்சியை அதிகப்படுத்துதல், நீண்ட நோக்கு வளர்ச்சியை உருவாக்குதல் இதன் மூலம் திடமான பொருளாதார வளர்ச்சி என்ற பாதையில் அனைத்து நாடுகளும் நடைபோடுதல் என்ற கோட்பாடோடு இம்மாநாட்டில் அனைத்து நாடுகளும் பங்கேற்கின்றன.

இம்மாநாட்டில் ஜி-20 நாடுகளின் உறுப்பினர்களைத் தவிர ஐ.நா உலக வங்கி,சர்வதேச நாணய நிதியம்,உலக வர்த்தக அமைப்பு, பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு மற்றும் நிதி நிலைப்புத்தன்மைக் குழு என்ற 7 சர்வதேச அமைப்புககளின் தலைவர்களும் இதில் பங்கேற்கிறார்கள். சிறப்பு விருந்தினர் நாடுகளாக இவ்வாண்டு எகிப்தும் கசகஸ்தானும் பங்கேற்கின்றன.

இம்முறை ஜி 20 நாடுகள் மாநாட்டின் அடையாளச் சின்னத்தை அழகாக வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்,

பாலத்தின் உருவத்தை 20 கோடுகள் கொண்ட படமாக வரைந்துள்ளனர், அதில் சீன முத்திரையுடன் ஜி-20 2016 சீனா என்று எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஜி-20 நாடுகள் ஆனது சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உலக பொருளாதார வளர்ச்சிப் பாலமாகவும் விளங்குவதை அழகியலோடு வெளிக்காட்டப்பட்டுள்ளது, அதோடு மட்டுமல்லாமல் இம்மாநாடு நடைபெறும் ஹாங்சோ நகர் பாலங்களின் நகர் என்று அழைக்கப்படுகிறது, அந்த பாரம்பரியத்தையும் பொருளாதார பாலத்தையும் ஒன்றாக நினைவுக் கூர்ந்து வெளிக்காட்டியுள்ளனர். ஹாங்சோ நகர் முழுவதும் ஜி-20 மாநாட்டால் விழாக் கோலம்பூண்டுள்ளது, வண்ணவண்ண தட்டிகள் மற்றும் இரவினில் கட்டிடங்களில் ஒளிரும் விளக்குகள் என மாநாட்டு தலைவர்களை வரவேற்கத் தாயாராகிவிட்டது ஹாங்சோ நகர், மேலும் பல உலக தலைவர்கள் வருகையினால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது,

சுற்றுலா சிறப்பு வாய்ந்த அழகான நகரான ஹாங்சோ நகரில் ஷி ஹீ ஏரி ஜிங் ஹாங் டாவ் யுன் ஹெ பழைய கால்வாய் மற்றும் ச்சியன் தாவ் ஹீ என்ற ஏரியில் உள்ள ஆயிரத்துகும் அதிகமான சிறிய தீவுகள் கூட்டாக அமைந்துள்ள அரிய காட்சிகள் உலகப் புகழ்பெற்றவை ஆகும், இத்தகைய சிறப்பு வாய்ந்த பாலங்களின் நகரில் ஜி -20 நாடுகள் மாநாடு நடைபெறுவதை பெருமைக்குரியது என்றால் மிகையல்ல..

உலக நாடுகளிடையே நிலவும் மந்தமான பொருளாதார நிலையை ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மூலம் மேம்படுத்திடவும் மேலும் பல புதிய சாதனைகளைப் படைத்திடவும் இந்த ஹாங்சோ மாநாடு வழிவகுக்கும் என்பது பங்கேற்கும் நாடுகளின் எதிர்பார்பாக உள்ளது.

- பலராம.சக்திவேல்

சீன வானொலி, தமிழ்ப்பிரிவு, பெய்ஜிங்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040