• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹாங்சோவில் ஷி சின்பிங்-நரேந்திர மோடி சந்திப்பு
  2016-09-04 15:53:16  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க வருகை தந்துள்ள இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் சீன அரசுத் தலைவர் ஷி சின்பிங் செப்டம்பர் 4ஆம் நாள் ஹாங்சோங்வில் சந்தித்துப் பேசினார்.

தற்போது, சீன-இந்திய உறவு சீராகவும், நிலையாகவும் விரைவாகவும் வளர்ந்து வருகிறது. இந்தியாவுடன் இணைந்து முயற்சி மேற்கொண்டு, இரு தரப்பு நட்பு ஒத்துழைப்பை முன்னெடுத்து புதிய முன்னேற்றம் பெற சீனா விரும்புகிறது என்று ஷி சின்பிங் தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களிடையேயான 8ஆவது சந்திப்புக்கு இந்தியாவின் முயற்சியை சீனா ஆதரிப்பதாகவும், ஹாங்சோவில் ஜி20 உச்சி மாநாடு ஆக்கமுள்ள சாதனைகளை படைப்பதை இந்தியா முன்னெடுக்க விரும்புவதாகவும், ஷி சின்பிங் கூறினார்.

தலைமை அமைச்சர் மோடி சந்திப்பின்போது பேசுகையில்,

21ஆவது நூற்றாண்டு, ஆசியாவின் நூற்றாண்டு ஆகும. ஆசிய நாடுகள் கைகோர்த்துக்கொண்டு முயற்சி செய்து நிலைப்புத்தன்மை மற்றும் செழுமையை கூட்டாக உருவாக்க வேண்டும். ஜி20 உச்சி மாநாடு புதிய சாதனைகள் படைக்கும் வகையில் சீனாவுடன் ஒருங்கிணைந்து இந்தியா செயல்படும். அரசுத் தலைவர் ஷி சின்பிங் இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொள்வதை எதிர்பார்கின்றேன் என்று கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040