20 நாடுகள் குழுவின் தலைவர்களது உச்சி மாநாடு செப்டம்பர் 4ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஹாங்சோவில் துவங்கியது. ஜி20 உச்சி மாநாடு சீனாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். சீன அரசுத் தலைவர் ஷி சின்பீங் இம்மாநாட்டிற்கு தலைமை தாங்கி, துவக்க உரையாற்றினார். பல்வேறு தரப்புகளும் கூட்டாக முயற்சி செய்து, நடப்பு உச்சி மாநாடு மூலம் உலகப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி, சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி, 20 நாடுகள் குழுவின் வளர்ச்சியை முன்னெடுத்தும் இலக்கை நனவாக்க வேண்டும் என்று ஷி ச்சின்பீங் உரையில் எதிர்பார்ப்பு தெரிவித்தார்.
8 ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேச நிதி நெருக்கடியின் மிக முக்கிய காலத்தில், 20 நாடுகள் குழு பொறுப்பேற்று, ஒரே எதிர்காலத்தை உருவாக்கும் கூட்டாளிக் கொள்கையை பின்பற்றியது. அதன் மூலம் உலகப் பொருளாதாரம், சரிவின் விளிம்பில் இருந்து மீண்டும் வளர்ந்து வரும் பாதைக்கு மீண்டும் இழுக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று, உலகப் பொருளாதாரம் மீண்டும் ஒரு முக்கிய நேரத்தில் நிற்கிறது. தற்போதுள்ள அறைகூவல்களை சமாளிப்பதற்காகவும், உலகப் பொருளாதார வளர்ச்சிக்காகவும், ஷி ச்சின்பீங் 5 முன்மொழிவுகளை விளக்கிக் கூறினார். அவர் கூறியதாவது
ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, உலகப் பொருளாதார வளர்ச்சியை உரியமுறையில் தூண்டி, நாணய நிலைப்புத்தன்மையை பேணிக்காக்க வேண்டும். வளர்ச்சி வழிமுறையை புத்தாக்கம் செய்து, அதிகரிப்பின் உந்து சக்தியை கண்டறிய வேண்டும். உலகப் பொருளாதார ஆட்சிமுறையை முழுமைப்படுத்தி, காப்புறுதி முறையை உறுதிப்படுத்த வேண்டும். திறந்த நிலை உலகப் பொருளாதாரத்தை வளர்த்து, வர்த்தகம் மற்றும் முதலீட்டின் சுதந்திரத்தை முன்னெடுக்க வேண்டும். 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தி, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்றார்.
20 நாடுகள் குழுவின் எதிர்கால வளர்ச்சி பற்றி ஷிச்சின்பீங் பேசுகையில்,
உலகப் பொருளாதாரத் தேவையின்படி, நெருக்கடியை சமாளிப்பது என்பதிலிருந்து விடுபட்டு, நீண்டகால ஆட்சி முறையின் உருவாக்கத்துக்கு ஏற்ப மாற்றம் செய்ய ஜி20 செயல்பட வேண்டும். மேலும், பரந்தளவில் ஆலோசனைகளைத் திரட்டி, உலக நாடுகள் குறிப்பாக வளரும் நாடுகளின் ஒலிகளை முழுமையாக கேட்டறிந்து, பல்வேறு நாடுகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றுசுட்டிக்காட்டினார்.
ஒட்டுமொத்த கொள்கையின் ஒருங்கிணைப்பு, பயன்மிக்க உலக நிதி ஆட்சி, வலிமைமிக்க வர்த்தக மற்றும் முதலீடு உள்ளிட்ட உலகப் பொருளாதாரத்தை உருவாக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து மாநாட்டில் பங்கேற்றுள்ள பல்வேறு தரப்புகள் 2ஆம் நாளும் விவாதம் நடத்த உள்ளன.