• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜி20 உச்சி மாநாட்டில் இரண்டு முக்கிய அம்சங்கள் குறித்த பான் கி மூனின் கருத்துக்கள்
  2016-09-05 18:50:41  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள ஐ.நா. தலைமைச் செயலாளர் பான் கி மூன் செப்டம்பர் 4ஆம் நாள் காலை ஹாங்சோவிலுள்ள செய்தி மையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். நடப்பு உச்சி மாநாட்டில், காலநிலை மாற்றப் பிரச்சினையில் முக்கிய காலடி எடுத்து வைக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

காலநிலை மாற்ற விவகாரத்தில், சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பை பாராட்டியதோடு, சீனாவும் அமெரிக்காவும், பாரிஸ் ஒப்பந்த்த்தில் அதிகாரப்பூர்வமாக சேர்வது, வரலாற்றுத்தன்மை வாய்ந்த ஒரு காலடியாகும் என்றும் பான் கி மூன் குறிப்பிட்டார்.

ஐ.நா.வின் 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரல் என்பதை நடப்பு உச்சி மாநாட்டின் முக்கிய பகுதியாக கொண்டு விவாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி பான் கி மூன் சீனாவின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார். உச்சி மாநாட்டில் தொடரவல்ல வளர்ச்சிக்கு ஏற்ற செயல்பாட்டுத் திட்டத்தை வகுப்பதை சீனா முன்னெடுப்பது என்பது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்ளிப்பாகும் என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040