• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திட்டமிடப்பட்ட இலக்குகளை நனவாக்கியுள்ள ஜி20 உச்சி மாநாடு
  2016-09-06 18:06:51  cri எழுத்தின் அளவு:  A A A   

ஹாங்சோவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. பல முக்கிய பொதுக் கருத்துக்கள் எட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு உச்சி மாநாட்டில் திட்டமிடப்பட்ட இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று சீன வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் ஹுவா ச்சுன்யீங் அம்மையார் 6ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

வளர்ச்சியைக் குவிப்பது என்பது, நடப்பு உச்சி மாநாட்டில் குறிப்பிடத்தக்க உள்ளடக்கமாகும். இதில் பங்கேற்ற வளரும் நாடுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதை தவிரவும், வளர்ச்சிப் பிரச்சினையில் அதிக முக்கிய சாதனைகள் பெறப்பட்டுள்ளன என்றும் ஹுவா ச்சுன்யீங் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040