• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கா:வெற்றிகரமான ஷிச்சின்பிங்-ஒபாமா சந்திப்பு
  2016-09-07 14:15:42  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜி20 அமைப்பின் ஹாங்சோ உச்சி மாநாட்டுக்கு முன் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் நடத்திய சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் 6ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில் ஒபாமா அரசு சீனாவுடன் வலுவான ஒத்துழைப்புறவை நிலைநிறுத்தி வருகிறது. சில துறைகளில் இருநாடுகளுக்கிடையே கருத்து வேற்றுமைகள் நிலவுகின்றன. இந்த கருத்து வேற்றுமைகளை அமெரிக்கா புறக்கணிக்காமல், இவை பற்றி சீனாவுடன் தொடர்ந்து பரிமாற்றம் மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040