சீனாவின் புகழ்பெற்ற இணைய சுற்றுலா நிறுவனம் ஒன்று அண்மையில் 2016ஆம் ஆண்டு கோடைகாலத்தில் வரவேற்கப்பட்ட வெளிநாடுகளின் வரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் முதலிடம் வகிக்கும் தாய்லாந்து தவிர, வேறு 4 ஆசியான் நாடுகளும் முதல் 10 இடங்களில் உள்ளன.
அண்மையில், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலா பணியகங்கள் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளன. இந்த புள்ளிவிபரங்களின்படி, இவ்வாண்டின் ஐனவரி முதல் ஏப்ரல் வரை, தாய்லாந்துக்குச் சென்ற சீனாவின் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதேகாலத்தில் இருந்ததை விட 27 விழுக்காடு அதிகம். முதல் காலாண்டில் மலேசியாவில் குறுகிய தூர பயணம் மேற்கொண்ட பயணிகளில், சீனப் பயணிகளின் எண்ணிக்கை 35.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இதே போன்று, கடந்த சில ஆண்டுகளில், சீனா வரவேற்கும் ஆசியான் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது சீனாவும் ஆசியான் நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று முக்கிய சுற்றுலா சந்தை மற்றும் சுற்றுலா செல்லும் இடமாக அமைந்துள்ளன. இதனால் இருதரப்பிடையே ஒன்றுடன் ஒன்று பரிமாறி, ஒன்றின் தேவையை மற்றது நிறைவு செய்து, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறக் கூடிய சீரான நிலைமை உருவாகியுள்ளது.
இது குறித்து சீன சமூக அறிவியல் கழகத்தைச் சேர்ந்த சுற்றுலா ஆய்வு மையத்தின் கௌரவ தலைவர் சாங் குவாங்ருய் பேசுகையில், நீண்டகாலமாக சீனாவும் ஆசியான் நாடுகளும் சீரான சுமுகமான அண்டை நாட்டுறவையும் பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் நிலைநிறுத்தி வருகின்றன. இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு இது அடிப்படையாக மாறியுள்ளது. மேலும், நிலையான ஒத்துழைப்பு முறைமை மற்றும் ஒருங்கிணைந்த கட்டமைப்பு, சுற்றுலா ஒத்துழைப்புக்கு தொடரவல்ல நிலையை உருவாக்கியுள்ளன என்று தெரிவித்தார்.
தவிரவும் கடந்த ஓராண்டில், ஆசியான் சுற்றுலா வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் சீனா பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சீனப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் வகையில், ஆசியான் நாடுகளும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
சீன-ஆசியான் சுற்றுலா ஒத்துழைப்பின் எதிர்காலத்தில் வாய்ப்புகள் அதிகம். இருதரப்பு அரசியல் பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கு இது துணைபுரியும். சீன-ஆசியான் உறவு தரம் இதன் மூலம் உயரும் என்று சாங் குவாங்ருய் கூறியதோடு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானத்தைப் பயன்படுத்தி, சீன-ஆசியான் பொது சுற்றுலா சமூகத்தை ஆக்கமுடன் உருவாக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.