இத்திட்டப்பணி, ஐரோப்பிய-ஆசிய கண்டத்தைக் கடந்து 440 கோடி மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இது உலகில் 63 விழுக்காடு வகிக்கிறது. பொருளாதார மதிப்பு 23 இலட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது உலகில் 29 விழுக்காடு வகிக்கிறது. இத்திட்டப்பணி, மத்திய மற்றும் நீண்ட காலத்தில் திறந்த பொருளாதாரம் என்ற புதிய அமைப்பு முறையையும் பொருளாதார தூதாண்மையையும் உருவாக்கும் உயர்நிலைத் திட்டம் இதுவாகும். இது மட்டுமல்லாமல், உலக ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியை முன்னேற்றும் சீனாவின் திட்டமும் இதுவாகும்.
அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் ஐ.நா துணைத் தலைமைச் செயலாளர் வூஹோங்போ பேசுகையில், இந்த முன்மொழிவு, 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிரலுடன் ஒரே எதிர்பார்ப்பையும் அடிப்படை கோட்பாட்டையும் கொள்கின்றது. தொடரவல்ல வளர்ச்சி பற்றிய ஐ.நாவின் இலக்கை நனவாக்குவதற்கு இது முக்கிய பங்கு ஆற்றும் என்று அவர் கூறினார்.
ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றி, கூட்டு வளர்ச்சி, கூட்டு செழுமை, அமைதி ஒத்துழைப்பு, திறப்பு, சகிப்புத் தன்மை ஆகியவற்றை முன்னேற்றி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை தூண்டுவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணியின் முக்கிய பகுதியாகும். இது, 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிரலின் அடிப்படை மதிப்புக் கருத்துக்குப் பொருந்தியது என்று அவர் கூறினார்.
தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் இத்திட்டப்பணியில் கலந்து கொண்டுள்ளன. சீனா, நெடுகிலுள்ள 30க்கும் மேற்பட்ட நாடுகளுடன் ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளது. ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியும் நாணய ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றிற்கு இடைவிடாமல் இதில் பங்களித்துள்ளது. சில சின்னமாக திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
திட்டப்படி, எதிர்காலத்தில், சீனா, பல்வேறு நாடுகளுடன் தொடர்ந்து கூட்டாக விவாதித்து, கட்டியமைத்து, பகிர்ந்து கொள்ளும். முக்கிய பிரதேசங்கள், முக்கிய நாடுகள், முக்கிய திட்டப்பணிகளில் அதிக கவனம் செலுத்தும். அடிப்படை வசதித் தொடர்பு மற்றும் பரிமாற்றம், ஒத்துழைப்பு, பொருளாதார தொழிற்துறை ஒத்துழைப்பு மண்டலத்தை முக்கியமாக்க் கொண்டு, மாதிரி மண்டலத்தைச் செயல்படுத்தி, தொடர்புடைய நாடுகளுக்கு பயனுள்ள சாதனைகளை வழங்க விரும்புகிறது.