யாங்சு ஆற்றுப் பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சித் திட்டம் ஒன்றை சீனா அண்மையில் வெளியிட்டது. இயற்சைச் சூழலுக்கு முன்னுரிமை வழங்குதல், பசுமையான வளர்ச்சி எனும் அடிப்படை கண்ணோட்டம் இத்திட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. யாங்சு ஆற்றின் பொருளாதார மண்டலத்திற்கான புதிய வளர்ச்சி கட்டுக்கோப்பு அடிப்படையில் உருவாக்கப்படும். யாங்சு ஆற்றின் இயற்சைச் சூழலைப் பெரிதும் பாதுகாத்து, போக்குவரத்து வழிபாதையைக் கட்டியமைப்பதை விரைவுப்படுத்தி, புத்தாக்கத்தின் மூலம் தொழில் துறை கட்டமைப்பின் மாற்றத்தை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றுவது உள்ளிட்ட யாங்சு பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சிக்கான மாபெரும் இலக்குகள் இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கியத் தேசிய நெடுநோக்குப் பணித் திட்ட ஆவணம் இதுவாகும்.
ஷாங்காய், ச்சியாங்சு, ஷெச்சியாங், ஆன் குய், ச்சியாங் சி, ஹுபெய், ஹுநான், ச்சுங் சிங், சிச்சுவான், யுன்னான், குய்சோ முதலியவை யாங்சு பொருளாதார வளர்ச்சி வழிப் பாதையில் அடக்கம். இயற்கைச் சூழலின் முக்கியம், பன்நோக்கு ஆற்றலின் வலிமை, வளர்ச்சி வாய்ப்பின் மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் போன்ற மேம்பாடுகளை இப்பிரதேசங்கள் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
யாங்சு ஆற்றின் பொருளாதார வளர்ச்சி மண்டலத்தின் வளர்ச்சியை விரைவுப்படுத்துவது, தற்போதைய சீனப் பொருளாதாரத்தின் அதிகரிப்புக்கு புதிய இயக்கு ஆற்றலையும் முன்மாதிரியையும் வழங்கும் என்று ஷாங்காய் போக்குவரத்து பல்கலைக்கழகம் மற்றும் ஃபூ தான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லூ மிங் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது
இப்பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, சீனப் பொருளாதாரத்திற்கு ஒரு முன்மாதிரியாக அமையும். இதில், தேவைப்படும். இப்பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, மக்கள் தொகை, தகுநிலை முதலியன மிக முக்கிய காரணிகள் என்பதில் ஐயமில்லை என்றார் அவர்.