• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவில் அதிகரித்து வரும் அன்னிய முதலீடு
  2016-09-14 11:09:52  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டின் முதல் 8 திங்கள் காலத்தில் சீனாவில் அன்னிய முதலீடு சீராக அதிகரித்து வருகிறது. புதிதாக நிறுவப்பட்டுள்ள அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையும், உண்மையாக பயன்படுத்தப்பட்ட அன்னிய முதலீட்டுத் தொகையும் அதேசமயத்தில் உயர்ந்துள்ளன. அவற்றில், அதிநவீன தொழில் நுட்பச் சேவைத் துறையில் முதலீடு தெளிவாக அதிகரித்துள்ளது என்று சீன வணிக அமைச்சகம் 13ஆம் நாள் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு திங்களில் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை, 2,736ஆக உள்ளது. இது, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 13.2 விழுக்காடு அதிகம். பயன்பாட்டிற்கு வந்துள்ள அன்னிய முதலீட்டுத் தொகை, 5,732 கோடி யுவான். கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது, 5.7 விழுக்காடு உயர்ந்துள்ளது. முதலீட்டு தொழில் துறைகளில், சேவை துறையில் அன்னிய முதலீடு அதிகரித்து வருகிறது. அதில், போக்குவரத்து, சேமிப்பு மற்றும் அஞ்சல், தகவல் பரிமாற்றம், கணினி மற்றும் மென்பொருள் சேவை உள்ளிட்ட சேவைத் தொழில்களில் முதலீடு பெருமளவில் அதிகரித்துள்ளது. அதிநவீன தொழில் நுட்ப சேவைத் துறையில் அன்னிய முதலீட்டுத் தொகை, 6,710 யுவானை எட்டியது. கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட இது 98.2 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தரவுகள், சீனாவில் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் தொழில்களின் கட்டமைப்பு மேம்படுட்டு வருவதைக் காட்டுகின்றன என்று சீன வணிக அமைச்சகத்தின் அன்னிய முதலீட்டுத் துறையின் துணை இயக்குநர் ஃபான் வென்ஜியே தெரிவித்தார். அவர் கூறியதாவது

முன்பு, அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்கு கொள்கை வெளிநாடுகளுக்கு திறந்து வைக்கப்பட்ட பிறகு, அன்னிய முதலீடு, தயாரிப்புத் துறையில் முக்கியமாக செய்யபட்டது. அண்மைக்காலமாக, வெளிநாட்டுத் திறப்பு தொடர்ந்து பெருகி வருவதுடன், சேவைத் துறை வெளிநாடுகளுக்கு திறந்த நிலை மென்மேலும் உயர்ந்துள்ளது. அந்த போக்கில், சேவை துறையில் அன்னிய முதலீடுகளின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார். வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்வதற்கு சீனா தொடர்ந்து வசதி அளித்து வருகிறது என்றும் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்கு மேலும் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும், ஃபான் வென்ஜியே தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

வணிகம் செய்வதற்கு சூழ்நிலைக் கட்டுமானத்தில் மிகுந்த கவனம் செலுத்தும் சீன அரசு,வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையான வசதியான சூழ்நிலையை உருவாக்க முயற்சி எடுக்கும். அண்மையில், அன்னிய முதலீட்டுத் துறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதாவது, அன்னிய முதலீடு தொடர்பான நான்கு தீர்மான வரைவுகள், கடந்த செப்டம்பர் 3ஆம் நாள் சீனாவின் தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியில் பரிசீலனை செய்யப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டன. இதற்கு உகந்த சட்ட திருத்தம் அக்டோபர் முதல் நாள் நாடு முழுவதிலும் நடைமுறைக்கு வரும். அதன் மூலம், சிறப்பு நுழைவு கட்டுப்பாட்டு நடவடிக்கை விதிக்கப்படாத அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் உருவாக்கப்படுவதற்கும் மாற்றம் செய்யப்படுவதற்கும் பதிவுச் செய்ய முடியும். இதற்கு அனுமதி செயல்முறை தேவையில்லை. இது, அன்னிய முதலீட்டு முறையில் முக்கிய சீர்திருத்தம் ஆகும். அது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மேலதிக வசதிகளையும் அளிக்கும். இத்தகைய சீர்திருத்தங்கள் மூலம், நல்ல முதலீட்டுச் சூழ்நிலை உருவாக்கப்படுமென நம்பிக்கை கொள்வதாக கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040