• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாரலிம்பிக் விளையாட்டு போட்டி ரியோ டி ஜெனிரோவில் நிறைவடைந்தது
  2016-09-19 16:09:22  cri எழுத்தின் அளவு:  A A A   
2016ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் நாள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் துவங்கிய 15ஆவது கோடைக்கால பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டி 18ஆம் நாள் நிறைவடைந்தது. ரியோ டி ஜெனிரோ கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டி, தென் அமெரிக்கக் கண்டத்தில் நடைபெற்ற முதலாவது பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும். சீனப் பிரதிநிதிக்குழு நடப்பு பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பெற்றுள்ளது. சீனப் பிரதிநிதிக்குழு பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை, பதக்கப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

நடப்பு பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சீனாவின் 308 விளையாட்டு வீரர்கள் 17 போட்டிகளைச் சேர்ந்த 308 ஆட்டங்களில் பங்கெடுத்தனர். வெளிநாடுகளில் நடைபெற்ற பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில், நடப்பு பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டி, சீன விளையாட்டு வீரர்கள் மிகவும் அதிகமாக பங்கெடுத்த விளையாட்டுப் போட்டி ஆகும். தவிர, சீன விளையாட்டு வீரர்கள் பங்கெடுக்கும் ஆட்டங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். சீன விளையாட்டு வீரர்கள் குழு நடப்பு விளையாட்டு போட்டியில் 107 தங்கப் பதக்கங்கள் 81 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 51 வெண்கல பதக்கங்களை வென்றெடுத்துள்ளது. சீன பிரதிநிதிக்குழு பெற்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை, 100ஐ தாண்டி, தங்கப் பத்தகப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

இது குறித்து, சீன விளையாட்டு வீரர்கள் பிரதிநிதிக்குழுவின் தலைவரும், சீன ஊனமுற்றோர் சம்மேளனத் தலைவருமான ச்சாங் ஹாய் தி அண்மையில் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், சீன விளையாட்டு வீரர்கள் நடப்பு பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பல ஆட்டங்களில் முக்கிய முன்னேற்றங்களைப் படைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"நடப்பு பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், தொழில் நுட்பங்கள் உயர்ந்த போட்டிகள் பலவற்றில் சீனா முன்னேற்றம் கண்டுள்ளது. வள்ளம் உள்ளிட்ட புதிதாக வளர்ந்து வரும் போட்டிகளில், சீனா வரலாற்றுப் பதிவை உருவாக்கியுள்ளது. பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளும் கடும் மாற்றுத் திறனுடைய விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது" என்றார் அவர்.

நடப்பு பாரலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், சீனப் பிரதிநிதிக்குழு தலைசிறந்த சாதனையைப் பெற்றதற்குக் காரணம் என்ன? இது குறித்துச் சீனப் பிரதிநிதிக்குழுத் தலைவர் ச்சாங் ஹாய் தி பேசுகையில், பாரலிம்பிக் விளையாட்டு போட்டியின் நிலை உயர்வாக இருக்கிறது. அறிவியல் ரீதியான முறையான பயிற்சியின் காரணமாக, சீனப் பிரதிநிதிக்குழு தலைசிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சீனாவின் 16 மாநிலங்கள் அல்லது மாநகரங்களில் ஊனமுற்றோருக்கான பயிற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. மிகவும் நல்ல விளையாட்டு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ள. இதனால் சீனாவின் ஊனமுற்ற விளையாட்டு வீரர்கள் நல்ல சாதனைகளை பெற்றுள்ளனர்" என்றார் அவர்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040