சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைந்து, பட்டுப் பாதை பொருளாதாரத்தின் முக்கிய பகுதியாக திகழ்கிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் தேசிய நெடுநோக்கு என்ற தலைப்பில், நாணயச் சேவையில் குறிப்பாக, நாடு கடந்த ரென்மின்பியின் சேவைக்கான புத்தாக்கத்தில் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசம், தொடர்புடைய பிரதேசங்களுக்கு இயக்கு ஆற்றலை வழங்கியுள்ளது. இதன் மூலம், உள்ளூர் பிரதேசங்கள், பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பாதையின் முன்னேற்றம் நனவாக்கப்படலாம் என்பது குறிப்பிட்டத்தக்கது. அதேவேளையில், ரென்மின்பியின் சர்வதேச மயமாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கு இது துணை புரியும்.
சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் காஷ் பொருளாதார வளர்ச்சி மண்டலத்தில் அமைந்துள்ள சின்ச்சியாங் ஹவா தியென் காஷ் மின்னாற்றல் தொழில் நிறுவனம், உள்ளூர் பிரதேசத்தில் ஒரு பெரிய ரக தொழில் நிறுவனமாக விளங்குகிறது. அண்மையில், ஒரு முக்கியமான மின்னாற்றல் திட்டப்பணியில் இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இத்திட்டப்பணி முடிந்த பிறகு, காஷ் பிரதேசத்தின் முக்கிய மின்னாற்றல் வழங்கும் மையமாக இது மாறும். இது, தொடர்புடைய தொழில் துறைகளை விரைவுப்படுத்தும். இத்திட்டப்பணிக்கு நாடு கடந்த ரென்மின்பி கடன் நிதியை வழங்கியுள்ளது.
இவ்வாண்டின் பிப்ரவரி மற்றும் ஜூலை திங்கள்காலத்தில், இந்நிறுவனத்தின் துணை மேலாளர் வாங் லெய், காஷ் என்னும் இடத்திலுள்ள ஒரு வங்கியிலிருந்து 20 கோடி யுவான் மதிப்புள்ள கடன்களைப் பெற்று, புதிய திட்டப்பணி உற்பத்தியில் இறங்கத் துவங்கியுள்ளார். அவர் கூறியதாவது
நாடு கடந்த கடனை, உள்நாட்டுக் கடனுடன் ஒப்பிடும் போது, சில வேறுபாடுகள் உள்ளன. நாடு கடந்த கடனுக்கு விண்ணப்பம் செய்யும் முறை மிகவும் எளிதானது. அதோடு, உள்நாட்டுக் கடனை விட மேலும் அதிகம் கடன் தொகை பெற முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.