சீனாவின் மக்கள் நாளேடு, சின்குவா செய்தி நிறுவனம், சீன வானொலி நிலையம், சீன மத்திய தொலைகாட்சி நிலையம், அமெரிக்க குஹன் நிதியம், இன்றைய ரஷியா தொலைகாட்சி நிலையம், அமெரிக்க புலூம்பர்க் செய்தி நிறுவனம் முதலியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, கருத்துக்களை பரிமாறி கொண்டனர்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டப்பணி பற்றி அடுத்த 3 ஆண்டுகளில் செய்தி ஊடகங்கள் எதிர்நோக்கும் 5 அறைகூவல்களை சீன வானொலி நிலையத்தின் துணை இயக்குநர் வூ பாங்செங் இக்கூட்டத்தில் தொகுத்து எடுத்து கூறினார்.
பல்வேறு நாடுகளின் செய்தி ஊடகங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் மேடையை உருவாக்கலாம். மனித பரிமாற்றம், தகவல் சேகரிப்பு, செய்தி வெளியிடுதல் முதலிய துறைகளில் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தலாம். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பாக அடிப்படை வசதிகளின் கட்டுமானம், வர்த்தகம் முதலியவை பற்றிய செய்திகளை அதிகமாக வெளிப்படுத்தலாம் என்று அவர் முன்மொழிந்தார்.
சீனாவுக்கும் ரஷியாவுக்குமிடை உறவு நெருக்கமாக இருந்தாலும், ரஷியாவின் செய்தி ஊடகங்கள் சீனா பற்றி பன்முகங்களிலும் ஆழமாகவும் செய்திகளை வெளியிடவில்லை. இதனால் சீனா பற்றிய ரஷிய மக்களின் அறிதல் மிகமிக குறைவு என்று ரஷியாவின் உலால் கூட்டாட்சி மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் திமிடர் ஸ்ட்ரோவ்ஸ்க்கி சுட்டிக்காட்டினார்.
கருத்துக்களைப் பரவல் செய்வதில் செய்தியாளர்கள் ஈடுபடுகின்றனர். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டப்பணி மக்களின் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு செல்வாக்குகளைக் கொண்டு வர முடியும் என்பதை செய்தி ஊடகங்கள் விபரமாகவும் சிறப்பாகவும் செய்திகளை வெளியிட்டு கூறலாம். இது செய்தி ஊடகங்களின் ஆற்றலாகும் என்று இந்த விவாத கூட்டத்தில் கலந்து கொண்ட சீன-ஐ-லிமிட்டித் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் சமேஹ் ஏல் ஷஹாத் கூறினார்.