• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காலமாகிய பெரேஸுக்கு லீகெச்சியாங்கின் அஞ்சலி
  2016-09-29 10:53:50  cri எழுத்தின் அளவு:  A A A   
இஸ்ரேலின் முன்னாள் தலைமை அமைச்சர் ஷிமன் பெரேஸின் மரணம் குறித்து, சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங் அந்நாட்டின் தலைமை அமைச்சர் பென்ஜமின் நெதன்யாஹுவுக்கு இரங்கல் செய்தி அனுப்பினார். சீன அரசு மற்றும் மக்களின் சார்பில் பெரேஸின் மரணத்துக்கு ஆழ்ந்த அஞ்சலியையும் அவரது குடும்பத்தினர் மற்றும் இஸ்ரேல் மக்களுக்கு மனமார்ந்த ஆறுதலையும் லீகெச்சியாங் இச்செய்தியில் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேலின் மூத்த அரசியல்வாதியான பெரேஸ், உலகில் செல்வாக்குமிக்கவர்களில் ஒருவராவார். மத்திய கிழக்கு அமைதி முன்னேற்றப் போக்கை ஊக்கத்துடன் மேம்படுத்திய அவர், சீன-இஸ்ரேல் நட்புறவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் முன்னேற்றுவதற்கும் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று லீகெச்சியாங் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040