• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தியாளர் கூட்டம்
  2016-09-30 14:05:48  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் 29ஆம் நாள் செயதியாளர் கூட்டம் நடத்தி, நடைபெறவுள்ள சியாங்சான் மன்றக் கூட்டம், தென் கொரியாவில் சாத் ஏவுகணை தடுப்பு தொகுதியை அமெரிக்கா கட்டியமைப்பது முதலிய பிரச்சினைகள் பற்றி செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தது.
சீன ராணுவ அறிவியல் கழகமும், சீன பன்னாட்டு நெடுநோக்கு ஆய்வகமும் கூட்டாக ஏற்பாடு செய்யும் சியாங்சான் மன்றத்தின் 7ஆவது கூட்டம் அக்டோபர் 10ஆம் நாள் முதல் 12ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதை, 60க்கும் அதிகமான நாடுகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிக் குழுக்களும், 100க்கும் அதிகமான நிபுணர்களும் உறுதி செய்துள்ளனர். சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் யாங் யூச்சுன் கூறியதாவது
முன்பை விட மேலதிக நாடுகள் விண்ணப்பித்துள்ளன. ஆசிய நாடுகளைத் தவிர, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் தென் பசிபிக் நாடுகள் பல இக்கூட்டத்தில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், இவ்வாண்டு கூட்டத்தின் போது, இளம் அறிஞர்களுக்கான கருத்தரங்கு, தொலைக்காட்சி கருத்தரங்கு ஆகியவை புதிதாக சேர்க்கப்படும். அதேவேளையில், பேச்சுவார்த்தை மூலம் பரிமாற்றம் செய்யும் இக்கூட்டத்தின் பங்கு மேலும் சிறப்பாக வெளியிடப்படும் என்றார் அவர்.
செப்டம்பர் திங்களின் துவக்கத்தில் தென் கொரியாவில் நடைபெற்ற சியோல் பாதுகாப்புக் கருத்தரங்கில் சீனா கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், சியாங்சான் மன்றக் கூட்டத்தில் தென் கொரியா கலந்து கொள்ளுமா இல்லையா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார். இதற்கு சீனாவின் அனைத்து அண்டை நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சியாங்சான் மன்றக் கூட்டத்தில் தென் கொரிய அரசுப் பிரதிநிதிக் குழு கலந்துகொள்ளும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாங் யூச்சுன் பதில் அளித்தார்.
தென் கொரியாவில் அமெரிக்கா சாத் எனும் ஏவுகணை தடுப்புத் தொகுதியைக் கட்டியமைப்பதால், சீனாவுக்கும் தென் கொரியாவுக்குமிடையான ஒரு பகுதி பரிமாற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக சில செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. யுங்காப் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின்படி, சாத் தொகுதியைக் கட்டியமைப்பதற்காக தென் கொரியாவின் சியங்கியுன் குன்னில் 3 இடங்களின் மீதான மதிப்பீடு பணி முடிந்தது. இது குறித்து யாங் யூச்சுன் பேசுகையில்,
இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றோம். சீனாவின் நெடுநோக்கு பாதுகாப்பு மற்றும் இப்பிரதேசத்தின் நெடுநோக்கு சம நிலையைப் பேணிக்காக்க தேவைப்படும் நடவடிக்கைகளை எடுப்போம். சீன மக்கள் தங்களது வாக்குறுதியை நிறைவேற்றுவது உறுதி என்று மீண்டும் வலியுறுத்துகின்றேன் என்றார் அவர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040