ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு முன்வைக்கப்பட்டு 2016-ம் ஆண்டுடன் 3 ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்த 3 ஆண்டுகளில், இப்பாதையின் நெடுகிலுள்ள முக்கிய திட்டப்பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம் மற்றும் சாதனைகள், திட்டமிட்ட நோக்கத்தைத் தாண்டியுள்ளது. சீனாவும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள தொடர்புடைய நாடுகளுடன் சேர்ந்து, இப்பாதையின் கட்டுமான முன்னேற்றப் போக்கில் நெருக்கமாக ஒத்துழைத்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் என்று நிபுணர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
2013ஆம் ஆண்டின் செப்டம்பர் திங்கள், கஜகக்ஸ்தானில் பயணம் மேற்கொண்ட சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் அர்த்தமுள்ள சிறப்புரைநிகழ்த்தினார். பட்டுப் பாதை பொருளாதார மண்டலம் எனும் முக்கிய முன்மொழிவை அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது
ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பல்வேறு நாடுகள் மேலும் நெருக்கமாக வளர்ந்து, கூட்டு ஒத்துழைப்பு மாதிரியை ஆழமாக்கி, வளர்ச்சி வாய்ப்புகளை விரிவாக்கி, புதிய ஒத்துழைப்பு மாதிரியைப் படைக்கலாம். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவு, இப்பாதையின் நெடுகிலுள்ள பல்வேறு நாடுகளுக்கு நலன் தரும் ஒரு முக்கிய இலட்சியமாகும் என்றார் அவர்.
அதற்குப் பிந்தைய திங்கள்காலத்தின் போது, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங், இந்தோனேசியாவில் பயணம் மேற்கொண்டார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர் சிறப்புரை நிகழ்த்தினார். ஆசியானின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து, கடல் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, 21ஆம் நூற்றாண்டில் கடல் பட்டுப் பாதையை சீனா கூட்டாக உருவாக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டத்தில் அமைந்துள்ளது. இது தொடர்புடைய பிரதேசங்கள் மற்றும் நாடுகளில் மக்கள் தொகை சுமார் 440 கோடியாகும். இது, உலகில் மக்கள் தொகையில் 63 விழுக்காட்டை வகிக்கின்றது. இதன் மொத்த பொருளாதார அளவு 23 இலட்சம் கோடி அமெரிக்க டாலராகும். இது, உலகின் மொத்த பொருளாதார அளவில் சுமார் 29 விழுக்காட்டை வகிக்கிறது. வெளிநாட்டுத் திறப்பு எனும் புதிய ரக பொருளாதார அமைப்புமுறையை உருவாக்குவதிலும் பொருளதார மற்றும் தூதாண்மைத் துறைகளிலும் தலைசிறந்த வடிவமைப்பாக இம்முன்மொழிவு விளங்குகிறது. உலகில் ஒத்துழைப்பை விரைவுப்படுத்தி, கூட்டு நலன்களைத் தரும் சீனாவின் திட்டமாகவும் இது திகழ்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.