சீன மத்திய வங்கி வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, இவ்வாண்டின் முதல் எட்டு திங்களில், சீனாவுக்கும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கும் இடையே நாடு கடந்த ரென்மின்பியின் உண்மையானப் பயன்பாட்டுத் தொகை, 86 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. கடந்த செப்டம்பர் திங்கள் இறுதி வரை, சீன மக்கள் வங்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள 21 மத்திய வங்கிகளுடன் இரு தரப்பு நாணயப் பரிமாற்ற உடன்படிக்கையை உருவாக்கியுள்ளது. ரென்மின்பியின் நாடு கடந்த பயன்பாடு தொடர்பான அலுவல் விரிவாகி வருகிறது.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற நெடுநோக்கு திட்டம், சர்வதேச சந்தையை விரிவாக்கி, சீனத் தொழில் நிறுவனங்களுக்கு மேலதிக வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்று சீன நிதித் துறையின் விமர்சகர் சேன் பிங் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டம், சந்தையை விரிவாக்கியுள்ளது. இத்திட்டம், ஐரோப்பிய மற்றும் ஆசிய கண்டங்களில் உள்ள பல்வேறு வட்டாரங்களை பெரிய சர்வதேச சந்தையாக வளர்க்கும். இத்திட்டம், சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு நன்மை பயக்கும். இதனால், சீனத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெறும்" என்றார் அவர்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டம், சீனத் தொழில் நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில், தொடர்புடைய வட்டாரத்தின் வளர்ச்சிக்கு புதிய இயக்கு ஆற்றலை வழங்கியுள்ளது. பட்டுப்பாதை பொருளாதார மண்டலத்தில் உள்ள முக்கிய பிரதேசமான சின்சிசயாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம், உருமுச்சியை மையமாகக் கொண்ட விமானப் போக்குவரத்து மையத்தை ஆக்கப்பூர்வமாக கட்டியமைத்து வருகிறது.
இதைத் தவிர, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற நெடுநோக்கு திட்டம் வழங்கியுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, சீன-வெளிநாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பில் வெளிக்கொணரும் முக்கிய பங்குகளை சின்ச்சியாங் ஆக்கப்பூர்வமாக விரிவாக்கியுள்ளது.