• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மக்கெள சிறப்பு நிர்வாக பிரேதசத்தினைப் பார்வையிட்ட சீனத் தலைமையமைச்சர்
  2016-10-11 14:19:46  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் அக்டோபர் 10-ஆம் நாள் சிறப்பு விமானம் மூலம் மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசத்தினைச் சென்றடைந்து, அப்பிரதேசத்தைப் பார்வையிட்டார். மேலும், சீன-போர்ச்சுகல் மொழி பேசும் நாடுகளின் பொருளாதார வர்த்தகக் மன்றத்தின் 5வது அமைச்சர்கள் நிலை கூட்டத்தின் துவக்க விழாவிலும் அவர் கலந்து கொண்டார். தலைமையமைச்சர் பதவி ஏற்ற பின், லீக்கெச்சியாங் மக்கெளவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை.

அன்று பிற்பகல், மக்கெள சிறப்பு நிருவாக அலுவலர் சுய் ஷிஆன்னுடன், லீக்கெச்சியாங் சிறப்பு நிர்வாக பிரதேச அரசுத் தலைமையகத்தைப் பார்வையிட்டார். ஒரு நாட்டில் இரு அமைப்பு முறைகள், மக்கெள மக்களே மக்கெளவை ஆளுவது, உயர்ந்த தன்னாட்சி ஆகிய கொள்கை மற்றும் அடிப்படைச் சட்டத்தைச் சிறப்பு நிர்வாக பிரதேச அரசு உறுதியாக செயல்படுத்த வேண்டும் என்றும், பொருளாதாரம் உரியமுறையில் பன்முக தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவதை முன்னேற்றி, முன்முயற்சியுடன் நாட்டின் வளர்ச்சி உத்திநோக்கு திட்ட நடைமுறையாகத்தில் இதைச் சேர்க்க வேண்டும் என்றும் லீக்கெச்சியாங் விருப்பம் தெரித்தார்.

சுய் ஷி ஆன்னின் தலைமையிலான மகெள சிறப்பு நிர்வாக பிரதேச அரசு, மக்கெள மக்களுக்கு தலைமை தாங்கி, மனிதரை முதன்மையில் வைப்பது, அறிவியல் வழிமுறையில் கொள்கையை வகுப்பது என்ற மதிப்பிலான கருத்தில், பல இன்னல் மற்றும் அறைகூவல்களைச் சமாளித்தது. பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, சமூகத்தின் இணக்கத்தை நிலைநிறுத்தும் துறையில் சிறப்பு நிர்வாக பிரதேச அரசு பல பயன்மிக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால், நடுவண் அரசு மக்கெள சிறப்பு நிர்வாக பிரதேச அரசின் பணியை வெகுவாகப் பாராட்டுகிறது என்று லீக்கெச்சியாங் தெரிவித்தார்.

மக்கெளவின் வளர்ச்சி, அறைகூவல்களையும் வாய்ப்புகளையும் எதிர்நோக்குகின்றது. வாய்ப்பையும் தேசிய நாட்டின் கொள்கையையும் பயன்படுத்தி, செழுமை மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவதோடு, வாழ்வுரிமையை மேலும் மேம்படுத்தி, உறைவிடம், பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று லீக்கெச்சியாங் குறிப்பிட்டார்.

மக்கெள சிறப்பு நிர்வாக பிரதேச அரசு ஆண்டுதோறும் நடத்தும் உலகச் சுற்றுலா பொருளாதாரக் கருத்தரங்கிற்கு லீக்கெச்சியாங் ஆதரவு தெரிவித்தார்.

இதனிடையில், மக்கெள சிறப்பு நிர்வாக பிரதேச அரசு தலைமையகத்தைப் பார்வையிடுவதற்கு முன், மக்கெளவிலுள்ள சுற்றுலா கோபுரத்திற்குச் சென்று, முழு பிரதேசத்தின் முழுக்காட்சியையும் கண்டு ரசித்தார். மேலும், சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் ஐந்தாண்டு வளர்ச்சி திட்டத்தை அவர் கேட்டறிந்தார். மக்கெள பொருளாதாரத்தின் உரிய வளர்ச்சியை முன்னேற்றுவது, நடுத்தர மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களை வளர்ப்பது, வேலை வாய்ப்பை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு லீக்கெச்சியாங் பாராட்டு தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040