சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 13-ஆம் நாள் கம்போடியாவின் தலைநகர் பினாம் பென்னில் அந்நாட்டின் மன்னர் நோரோதோம் சிகாமோனியைச் சந்தித்துரையாடினார்.
ஷிச்சின்பீங்கின் வருகைக்கு சிறப்பான வரவேற்பு விழாவை நடத்திய மன்னர் சிகாமோனி, கம்போடிய மன்னர் குடும்பம், அரசு மற்றும் மக்களின் சார்பில், உளமார்ந்த முறையில் ஷிச்சின்பீங்கிற்கு வரவேற்பு தெரிவித்தார்.