• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சென்செள 11 எனும் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலம் 17ஆம் நாள் விண்ணில் ஏவப்படும்
  2016-10-16 16:36:35  cri எழுத்தின் அளவு:  A A A   

சென்சௌ 11 எனும் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலம் அக்டோபர் 17ஆம் நாள் 7:30 மணிக்கு விண்ணில் ஏவப்படும். ஜிங் ஹைபேங் மற்றும் சென் டோங்கால் விண்வெளிவீரர் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

16ஆம் நாள் காலை இது பற்றி ஜியோச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்டப்பணி அலுவலகத்தின் துணை இயக்குநர் வூ ப்பீங் இதை தெரிவித்தார்.

அவர் பேசுகையில், திட்டப்படி, இந்த இரண்டு விண்வெளிவீரர்கள் கோளப்பாதையில் 33 நாட்கள் தங்குவார்கள். அவர்கள் பாதுகாப்பாக இருந்து, உயர் பயனுள்ள முறையில் பணி புரிவதை உத்தரவாதம் செய்யும் வகையில், 4 துறைகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

பறக்கும் கடமையின் கோரிக்கைக்குப் பொருந்தும் வகையில், சென்செள 11 விண்கலத்தில் பல தொழில் நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

டியன்கோங் 2 விண்வெளி ஆய்வகம் பாதையில் இயங்குவதற்கு மனிதர் மற்றும் பொருட்கள் போக்குவரத்து சேவையை வழங்குவது, டியன்கோங் 2 விண்வெளி ஆய்வகமும், சென்சௌ 11 விண்கலமும் ஒன்றிணைவது, மனிதர்கள் கலந்து கொள்ளும் பல்வகை விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள உதவு செய்வது முதலியவை, இக்கடமையின் முக்கிய நோக்கங்களாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு முடிவு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040