இவ்வாண்டின் முதல் 9 திங்களில் வெளிநாடுகளின் நிதிச் சார்பற்றத் துறையில் சீனாவின் முதலீடு நிலைமை பற்றிய அறிக்கையை சீன வணிக அமைச்சகம் 17ஆம் நாள் வெளியிட்டது. புள்ளிவிபரங்களின் படி இக்காலத்தில் வெளிநாடுகளில் சீனாவின் முதலீட்டுத் தொகை 13ஆயிரத்து 422 கோடி அமெரிக்க டாலராகும். கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட இது 53.7 விழுக்காடு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேகமான அதிகரிப்பு என்பது இவ்வாண்டு சீனாவின் வெளிநாட்டு முதலீட்டின் தனிச்சிறப்பாகும். மேலும், இவ்வாண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை சேவை வர்த்தகத் தொகை தீவிரமாக அதிகரித்துள்ளது. இதில், சேவைத் துறை தொடர்பான இறக்குமதித் தொகை ஏற்றுமதித் தொகையை விட ஒரு இலட்சம் கோடி யுவானுக்கும் அதிகமாகும். இவ்வாண்டு வெளிநாடுகளுடன் தொடர்பான புதிய திட்டப்பணி உடன்படிக்கைகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது என்று சீன வணிக அமைச்சகத்தின் ஒத்துழைப்புப் பிரிவின் அலுவலர் ஹான்யுங் கூறினார்.
குறிப்பாக ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற திட்டப்பணியின் நெடுகிலுள்ள நாடுகளுடனான திட்டப்பணிகள் அதிகரித்துள்ளன. வெளிநாட்டுக் கூட்டு நிறுவனங்களை ஒன்றிணைக்கும் சீனத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டுத் தொகையும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதேவேளையில், சீனாவுடன் தொடர்புடைய பல வெளிநாட்டு பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு மண்டலங்களின் கட்டுமானமும் சீராக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஹான் யுங் மேலும் கூறியதாவது
இவ்வாண்டின் முதல் 9 திங்களில், சீன தொழில் நிறுவனங்கள் ஏற்றுள்ள 5 கோடி அமெரிக்க டாலருக்கு அதிகமான மதிப்புடைய வெளிநாட்டுத் திட்டப்பணிகளின் உடன்படிக்கை 512 ஆகும். கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 33 அதிகமாகும். வெளிநாடுகளில் சீனத் தொழில் நிறுவனங்கள் 521 ஒன்றிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அவற்றின் வர்த்தக மதிப்பு 6744 கோடி அமெரிக்க டாலராகும். இத்தொகை கடந்த ஆண்டு முழுவதிலும் இருந்ததை விட அதிகம் என்று அவர் கூறினார்.
மேலும் இவ்வாண்டின் முதல் 8 திங்களில், சேவைத் துறை தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 3 இலட்சத்து 47 ஆயிரத்து 140 கோடி யுவானாகும். கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட இது 24 விழுக்காடு அதிகமாகும். சீன வணிக அமைச்சகத்தின் சேவை வர்த்தக பிரிவின் பார்வையாளர் டாங் சுன் கூறியதாவது அதிக சீன மக்கள் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது மற்றும் கல்வி பெறுவது உள்ளிட்ட காரணமாக, இவ்வாண்டின் முதல் 8 திங்களில் சேவைத் துறை தொடர்பான இறுக்குமதி தொகை ஏற்றுமதி தொகையை விட ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 280 கோடி யுவான் அதிகமாகும் என்று அவர் கூறினார்.