• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஒழுங்குமுறையை வலுப்படுத்துவது
  2016-10-24 14:02:45  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது மத்திய கமிட்டியின் 6ஆவது முழு அமர்வுக் கூட்டத் தொடர் இன்று திங்கள்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியுள்ளது. கண்டிப்பான வழிமுறையில் கட்சியின் ஒழுங்குமுறையை பன்முகமாக வலுப்படுத்துவது தொடர்பாக, இக்கூட்டத் தொடரில் ஆய்வு மேற்கொள்ளபடும். தவிரவும், புதிய சூழ்நிலையில், கட்சிக்குள்ள அரசியல் செயல்பாட்டு விதிமுறையை வகுப்பது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கண்காணிப்பு விதிகளை திருத்தம் செய்வது ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

நடப்புக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் அம்சங்கள், வெளிவர உள்ள ஆவணங்கள் ஆகியவற்றில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பான முறையில் கட்சியின் ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதன் அனுபவஙள் மற்றும் நடவடிக்கைகள் தொகுக்கப்படும். இவை, அடுத்த கால கட்டத்தில் கட்சி ஒழுங்குமுறையை வலுப்படுத்துவதற்கான ஆதாரத்தையும் வழிக்காட்டியையும் வழங்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாடு நடைப்பெற்ற பிறகு, கட்சியின் மத்திய கமிட்டி, கண்டிப்பான முறையில் கட்சியின் ஒழுங்குமுறையை வலுப்படுத்தும் பணியை நெடுநோக்கு நிலையில் உயர்த்தியுள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்ட பின், ஊழல் எதிர்ப்புப் பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் பெறப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில், உயர் நிலை அதிகாரிகள் 150க்கும் அதிகமானோரும், கீழ் நிலை அதிகாரிகள் 2 லட்சத்துக்கும் அதிகமானோரும் ஊழல் விவகாரம் விசாரணை செய்யப்பட்டுள்ளனர். வரலாற்றில் நடைமுறையில் இல்லாத அளவுக்கு தற்போது ஊழல் எதிர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பற்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சிக் கல்லூரியின் பேராசிரியர் ஷியே ச்சுன்டாவ் கூறியதாவது

மிகப் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு மிக தெளிவான முன்னேற்றங்கள் பெற்றப்பட்டவை, கட்சியின் கட்டுமானம், குறிப்பகாக, கட்சியின் சூழ்நிலை மற்றும் அரசின் நேர்மைத் தன்மை ஆகும். இது, பல பொது மக்களின் கருத்து கணிப்பில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. சீனாவிலும், சர்வதேச சமூகத்திலும், கட்சியின் நடவடிக்கைகளுக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்துள்ளன என்றார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் உள்ள கண்காணிப்பு விதிமுறையின் திருத்தம் பற்றி, பீக்கிங் பல்கலைக்கழகத்தின் அரசு நேர்மைக் கட்டுமானம் மற்றும் ஆய்வு மையத்தின் துணைத் தலைவர் சுவாங் தே சுய் கூறியதாவது

இந்த விதிமுறை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. கால மாற்றத்துடன், பழைய கண்காணிப்பு விதிமுறையில் சில உள்ளடக்கங்களும் விதிகளும், புதிய நிலைக்கு ஏற்றதாக இருக்காது. இந்நிலையில், அதிலுள்ள உள்ளடக்கம் மற்றும் நடைமுறையாக்கம் தொடர்பாக திருத்தம் மேற்கொள்வது அவசியம் என்று தெரிவித்தார்.

6ஆவது முழு அமர்வுக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும் புதிய கண்ணோட்டம், கருத்து ஆகியவை, அடுத்த காலக்கட்டத்தில் சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக்கான முக்கிய வழிகாட்டியாக இருக்கும். இக்கூட்டத் தொடர், முழு கட்சி மற்றும் சமூகத்தின் பொது கருத்துக்களை திரட்டி, முழு நாட்டின் கட்டுமானத்தையும் வளர்ச்சியையும் முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040