1971ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் 26ஆவது ஐ.நா பொதுப் பேரவையில் மிகப் பெரும்பான்மை வாக்குகளின் மூலம் 2758ஆவது தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஐ.நாவின் சட்டப்பூர்வமான உறுப்பு நாடாக சீன மக்கள் குடியரசு மறுபடியும் இணைக்கப்பட்டது. சீனத் துணை வெளியுறவு அமைச்சர் லீ பொ துங் 25ஆம் நாள் நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகையில், 2758ஆவது தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, சீன-ஐ.நா உறவுக்கும், சீன-உலகின் உறவுக்கும் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது என்றும், இது பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார்.
கடந்த 45 ஆண்டுகளில், அமைதிகாப்பை முன்னேற்ற சீனா பாடுபட்டு, பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சைகளைத் தீர்ப்பதை முன்வைத்துள்ளது. கூட்டு வளர்ச்சியை விரைவுபடுத்தி, புத்தாயிரம் ஆண்டுக்கான வளர்ச்சி இலக்கை நனவாக்க பாடுபடுகிறது. ஆயுதக் கட்டுப்பாட்டுப் போக்கை விரைவுபடுத்தி, சர்வதேச சட்ட ஒழுங்கைப் பேணிகாக்கப் பாடுபடுகின்றது. சர்வதேச மனித உரிமை லட்சியத்தின் சீரான வளர்ச்சியை முன்னேற்றி, வளர்ச்சி தொடர்பான ஐ.நாவின் பணிகளை விரைவுபடுத்த பாடுபட்டு வருகிறது. சீனாவுக்கும் ஐ.நாவுக்கும் இடையேயான ஒத்துழைப்பு, புதிய வாய்ப்பை எதிர்நோக்குகின்றது என்று லீ பொ துங் சுட்டிக்காட்டினார்.
வளர்ச்சி தொடர்பான சிறப்பு விவாதத்தில், ஐ.நா மற்றும் சீனாவுக்கான ஐ.நாவின் தொடர்புடைய அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமானோர், சீனாவின் முன்மொழிவு குறித்து ஆழமாக விவாதித்தனர். உலகின் தொடரவல்ல வளர்ச்சியைத் தூண்டுவதில் சீனா செய்துள்ள முயற்சிகளை அவர்கள் பாராட்டினர். ஐ.நாவின் துணை தலைமைச் செயலாளர் ஜேப்ரி ஃபெல்ட்மன் பேசுகையில், ஐ.நாவில் சீனா முக்கிய பங்காற்றுகிறது. பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடாக, சீனா குறிப்பிட்டத்தக்க பங்காற்றியுள்ளது என்று தெரிவித்தார். 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சி நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதன் மூலம், சீனாவுக்கும் ஐ.நாவுக்குமிடையேயான ஒத்துழைப்பு மேலும் நெருக்கமாக இருக்கும் என்றும், உலகின் தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்குவதற்கு முக்கிய உத்தரவாதம் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.