சீன கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது மத்திய கமிட்டியின் 6ஆவது முழு அமர்வில் எடுக்கப்பட்டுள்ள அரசியல் வாழ்க்கை குறித்த புதிய விதிமுறை
27ஆம் நாள் 4 நாட்கள் நீடித்த சீன கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது மத்திய கமிட்டியின் 6ஆவது முழு அமர்வு பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைமுறை தலைவர்கள், கட்சியின் கட்டுமானம் பற்றி முழு அமர்வை நடத்துவது இதுவே முதல்முறையாகும். கண்டிப்பான முறையில் கட்சி ஒழுங்குமுறையை பன்முகங்களிலும் வலுப்படுத்துவதன் 2 ஆவணங்கள் இந்த முழு அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. புதிய நிலைமையில் கட்சிக்குள்ளான அரசியல் வாழ்க்கை பற்றிய சில விதிமுறைகள், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கண்காணிப்பு விதிமுறை ஆகியவை, இந்த ஆவணங்களாகும். தவிர, தோழர் ஷிச்சின்பிங்கை மையமாக கொண்ட கட்சி மத்திய கமிட்டி என்பதை இந்த முழு அமர்வு அதிகாரப்பூர்வமாக முன்வைத்துள்ளது. அனைத்து கட்சியின் உறுப்பினர்களும், தோழர் ஷிச்சின்பிங்கை மையமாக கொண்ட கட்சி மத்தியி கமிட்டியை நெருக்கமாகச் சுற்றி இருந்து, கண்டிப்பான முறையில் கட்சி ஒழுங்குமுறையை பன்முகங்களிலும் வலுப்படுத்துவதை தொடர்ந்து முன்னேற்றி, கட்சியின் தலைமையில், சீன தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச இலட்சியத்தின் புதிய நிலைமையை மக்கள் இடைவிடாமல் திறந்து வைப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
கட்சிக்குள்ளான அரசியல் வாழ்க்கையை கண்டிப்பான முறையில் கையாள்வது, கண்டிப்பான முறையில் கட்சி ஒழுங்குமுறையை பன்முகங்களிலும் வலுப்படுத்துவதன் அடிப்படையாகும் என்று பொது செயலாளர் ஷிச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாடு நிறுவப்பட்ட பிறகு பலமுறை வலியுறுத்தியுள்ளார். இந்த முழு அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய நிலைமையில் கட்சிக்குள்ளான அரசியல் வாழ்க்கை பற்றிய சில விதிமுறைகள், 36 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய கமிட்டியின் முழு அமர்வு மீண்டும் கட்சிக்குள்ளான அரசியல் வாழ்க்கைக்கு வழங்கிய புதிய விதிகளாகும்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாடு 2017ஆம் ஆண்டின் பிற்பாதியில் பெய்ஜிங்கில் துவங்கும் என்று இந்த முழு அமர்வு முடிவு எடுத்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி கல்லூரியின் பேராசிரியர் சின்மீங் பேசுகையில்,
சீன கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பான முறையில் கட்சி ஒழுங்குமுறையை பன்முகங்களிலும் வலுப்படுத்துவது புதிய கட்டத்தில் நுழைவதை சீன கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது மத்திய கமிட்டியின் 6ஆவது முழு அமர்வு காட்டுகிறது. இது, சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கிய மாபெரும் இலட்சியம் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைக்கும் என்று அவர் கூறினார்.